Viral Video: பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் 10 வயது பள்ளி மாணவன் ஒரு ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி மேலும் வேறு இரண்டு பேருடன் சேர்ந்த அந்த மாணவனின் கை, கால்களை பிடித்து இழுத்து இந்த கொடூர செயலை மேற்கொண்டுள்ளார். அந்த மாவட்டத்தில் உள்ள பால் விகாஸ் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் இரண்டு நாட்கள் தொடர்ந்து அந்த மாணவனை சித்திரவதை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லூதியானா மாவட்ட போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆசிரியர் மீது வழக்குப் பதிவு மேற்கொண்டுள்ளனர். அவர் அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஷெர்பூர் கலான் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ பகவான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை போலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.


தாக்கிய சம்பவம் குறித்து அம்மாவிடமும், வீட்டிலும் சொல்லக் கூடாது என்றும், அவ்வாறு சொன்னால் பள்ளியில் இருந்து நீக்கிவிடுவேன் என மாணவனையை ஆசிரியர் எச்சரித்துள்ளார். சிறுவன் நடப்பதற்கு சிரமப்பட்டு வலியால் துடித்ததை அவதானித்த தாய்க்கு ஆசிரியரின் சித்ரவதை குறித்து தெரியவந்துள்ளது. என்ன நடந்தது என்று மாணவனிடம் கேட்டபோது, அவர் எல்லாவற்றையும் கூறினார். இதையறிந்த தாய், சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து, சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.



மேலும் படிக்க | இரவு முழுவதும் ஓடிய ஏசி..! காலையில் காத்திருந்த அதிர்ச்சி!


மாணவனை ஆசிரியர் சித்ரவதை செய்த வீடியோ பள்ளி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அது தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டது. பதிவேற்றம் செய்யப்பட்டதில் இருந்து, வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளை வந்துள்ளது. இப்படி ஒரு கொடூரமான செயலில் எப்படி ஒருவர் ஈடுபட முடியும் என பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


"...குற்றவாளிக்கு காவல்துறையிடம் இருந்தும் அதே சிகிச்சை கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார். இதற்கிடையில், முன்னதாக, ஒரு குழப்பமான வீடியோ இணையத்தில் வெளிவந்து ஆன்லைனில் பெரும் சீற்றத்தைத் தூண்டியது. 


சில நாள்களுக்கு முன் ஒரு மழலையர் பள்ளியில் குழந்தைகளின் குழு ஒன்று கவனிக்கப்படாமல் விடப்பட்ட வீடியோ வைரலானது. வீடியோவில், அவர்களில் குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் மீண்டும் மீண்டும்  அடிப்பதைக் காண முடிந்தது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளமான 'X' பயனர் பதிவேற்றியதை அடுத்து வைரலானது.


பெங்களூருவில் மழலையர் பள்ளியின் அறையில், பொம்மைகள் மற்றும் பிற விளையாட்டுப் பொருட்களுடன்  சிறு குழந்தைகளின் குழுவை வீடியோவில் காண முடிகிறது. மேலும் வீடியோவில், நீல நிற சேலை அணிந்த பெண் ஒருவர் கதவுக்கு அருகில் நிற்பதைக் காணலாம். அவர் குழந்தைகளில் ஒருவரை அறைக்கு வெளியே அழைத்துச் செல்கிறாள், மீதமுள்ளவர்களை கவனிக்காமல் சென்றுவிடுகிறார். அப்போதுதான் அறையில் உள்ள குழந்தைகளில் ஒருவர் மற்றொரு குழந்தையை அடிக்கத் தொடங்குகிறார்.


மேலும் படிக்க | நிம்மதியாக தூங்க இரவு முழுவதும் ஏசியை ஓடவிட்ட மருத்துவர்..! பறிபோன பிஞ்சு உயிர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ