அதிர்ச்சி தந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு... 40 பெண்களின் கணவர்களுக்கு ஒரே பெயர்!
பீகாரில் ஏப்ரல் 15ம் தேதி முதல் சாதி வாரி கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் கீழ் அனைத்து சாதியினருக்கும் குறியீட்டு எண்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
பீகாரில் நடந்து வரும் ஜாதிவாரி கணக்கெடுப்பின் போது ஆச்சரியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதிக்கு தகவல் சேகரிக்க சென்ற அதிகாரிகள், 40 பெண்களின் கணவர் பெயர்கள் ஒன்றாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு 40 பெண்கள் தங்கள் கணவரின் பெயர் ரூப்சந்த் என்று கூறியுள்ளனர். இது குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு வந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அர்வாலின் ஒரு பகுதியில், 40 பெண்கள் ரூப்சந்தை தங்கள் கணவர் என்றும், சிலர் ரூப்சந்தை தங்கள் மகன் என்றும் அப்பா என்றும் அழைத்தனர். ஆனால், பீகாரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொண்ட அதிகாரிகளால் ரூப்சந்த் என்ற நபரை சந்திக்க முடியவில்லை. இந்த தகவல் வெளியானதை அடுத்து, நிர்வாகத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.
பீகாரில் ஏப்ரல் 15ம் தேதி முதல் பல்வேறு சாதி மக்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் கீழ் அனைத்து சாதியினருக்கும் குறியீட்டு எண்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நிதிஷ் அரசு நடத்தி வரும் ஜாதிவாரி கணக்கெடுப்பின் போது, அதிகாரிகள் மக்களிடம் 17 விதமான கேள்விகளை கேட்கின்றனர்.
மேலும் படிக்க | செல்போனால் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. பெற்றோர்களே உஷார்
கணக்கெடுப்பின் போது அதிகாரிகள் பெண்களிடம் அவர்களின் கணவரின் பெயரை கூறுமாறுக் கேட்டபோது, இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ஒரே பகுதியில் வெவ்வேறு வீடுகளில் வசிக்கும் பெண்கள் தங்கள் கணவரின் பெயரை ரூப்சந்த் என்று தெரிவித்தனர். உண்மையில், இந்த பெண்கள் வசிக்கும் இடம் சிவப்பு விளக்கு பகுதி. இங்குள்ள பெண்கள் காலங்காலமாக ஆடியும் பாடியும் வாழ்கின்றனர்.
மேலும் படிக்க | திருப்பதியில் மே - ஜூன் தரிசன டிக்கெட் இன்று வெளியீடு!
அதே நேரத்தில், சில பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக வேலை செய்து தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். இந்த பெண்கள் முன் இருக்கும் பெரிய பிரச்சனை என்னவென்றால், அவர்கள் தங்கள் கணவரின் பெயரை கேட்டால் என்ன சொல்ல வேண்டும் என்பதுதான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பணத்தையே தன் எல்லாமாக ஏற்றுக்கொண்டவள் என்ற அர்த்தத்தில், பணத்தின் பெயரை குறிப்பிட முடிவு செய்தார்கள். அதனால் தான் ரூப்சந்த் என்று கணவன் பெயரை குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். இங்கு சில பெண்கள் மகன் மற்றும் தந்தையின் பெயர்களுக்கான இடத்தில் ரூப்சந்தின் பெயரை குறிப்பிட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தாளில் எழுதி வைத்துள்ளனர். இந்தப் பெண்கள் பணத்தை ரூப்சந்த் என்று அழைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஹர ஹர மகாதேவா முழக்கத்துடன் யாத்ரீகர்களுக்காக திறக்கப்பட்ட கேதார்நாத் கோவில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ