கணவன் தன்னை பணம் காய்க்கும் மரம் போல் நடத்திய செயலால் மனம் ஒடிந்த மனைவி, தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகத்தை சேர்ந்த குறிப்பிட்ட தம்பதிக்கு  கடந்த 1999ம் ஆண்டு சிக்கமகளூரில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2001ல் குழந்தை பிறந்தது. கணவருக்கு கடன் பிரச்சனை அதிகம் இருந்தன் காரணமாக,அவருக்கு உதவியாக இருக்க மனைவி  ஐக்கிய அரபு அமீரகம் சென்று மனைவி வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தார். மேலும் தனது கணவரின் கடனையும் அடைத்ததோடு, சொத்துக்களும் வாங்க துவங்கினார்.


குடும்பக் கடனை அடைப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்குச் சேர்ந்தா மனுதாரர், கணவர் பெயரில் விவசாய நிலமும் வாங்கியுள்ளார். ஆனால்,  கணவர் ஏதேனும் ஒரு வகையில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே  இல்லாமல் இருந்ததோடு, குடும்பத்தின் நிதித் தேவைகளுக்காக மனைவியையே சார்ந்திருந்தார்.  2012 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கணவருக்காக ஒரு சலூன் கடை கூட அமைத்து கொடுத்தார். ஆனால்,  அதனை சரியாக நிர்வகிக்காமல், 2013ம் ஆண்டு இந்தியா திரும்பினார்.


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி எஸ்.பியாக சார்ஜ் எடுத்துக்கொண்ட பகலவன் ஐபிஎஸ்-ஸின் அடுத்த மூவ்


மேலும், மனைவியிடம் அவரது கணவர், குடும்பத்தினர் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மனம் உடைந்தார். மேலும் தன்னை கணவரின் குடும்பத்தினர் ஏடிஎம் கார்டு போன்று பணத்துக்காக மட்டுமே பயன்படுத்துவதை நினைத்து மனம் உடைந்து, கணவரிடம் இருந்து விவாகரத்து கோர விரும்பினார். எனினும், மனைவி,  விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவை  நிராகரித்த  குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்துவிட்டது.  பின்னர் அவரது விண்ணப்பத்தை நிராகரித்த கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தார் அந்த மனைவி.


இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிமன்றம், மனைவியை 'பண காய்க்கும் மரம்' போல் கணவன் நடத்தியதைக் கண்டறிந்து.  தம்பதிக்கு விவாகரத்து வழங்கியது. அதன் சமீபத்திய தீர்ப்பில், நீதிபதிகள் அலோக் ஆராதே மற்றும் ஜே எம் காஜி ஆகியோர் அடங்கிய நீதிமன்ற பிரிவு, கணவன் மனைவியை 'பணம் காய்க்கும் மரம்' போல் நடத்துவது கொடுமை படுத்துவதற்கு சமம் என்று கூறியது. பாதிக்கப்பட்ட பெண், பல ஆண்டுகளாக கணவருக்கு  மொத்தம் ₹ 60 லட்சத்தை வழங்கியதை நிரூபிக்க வங்கி கணக்கு பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் பிற ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவர் மனுதாரரை பணம் காய்க்கும் மரமாக கருதினார் என்பது தெளிவாகிறது. மனுதாரருடன் பிரதிவாதிக்கு எந்த விதமான உணர்ச்சி ரீதியான தொடர்பும் இல்லை. மனுதாரருக்கு ஆழ்ந்த மன வேதனையும் வலியையும் கொடுக்க இது போதுமானது என கூறியது. கீழ் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. மனைவியின் மேல்முறையீட்டை குடும்ப நீதிமன்றம் ஏற்காமல் கடுமையாகத் தவறிழைத்துள்ளது என  உயர் நீதிமன்ற பெஞ்ச் கூறியது. 


கீழ் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு மீதான விசாரணையில், கணவர் ஆஜராகாததால், வழக்கில் முன்னாள் தீர்ப்பளிக்கப்பட்டது. கொடுமைக்கான காரணம் நிரூபிக்கப்படவில்லை என்று கீழ் நீதிமன்றம் கூறியிருந்தது.


மேலும் படிக்க | நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபர் - நெல்லையில் பரபரப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ