சினிமாவை மிஞ்சிய கொடூர சைக்கோ! 7 பெண்கள் கொலை..! தோண்டத்தோண்ட சடலங்கள்!
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏழு பெண்களைக் கடத்திச் சென்று கொலை செய்த சைக்கோ கொலையாளியை, விகாராபாத் போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏழு பெண்களைக் கடத்திச் சென்று கொலை செய்த சைக்கோ கொலையாளியை, விகாராபாத் போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். சினிமாவை மிஞ்சும் அளவுக்கு கொடூரமான இந்த சைகோ சிக்கியது எப்படி?
தெலங்கானா மாநிலம் பெத்தமுல் நகரைச் சேர்ந்தவர் கிஸ்தப்பா. இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணை கடத்திச் சென்று கொலை செய்ததாக புகார் வந்ததை அடுத்து அதை விசாரித்த போலீசாருக்கு அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அவர் பல பெண்களை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.
கிஸ்தப்பாவால் ஏழாவதாக கொல்லப்பட்ட அந்த பெண், கடந்த நவம்பர் 29 அன்று காணாமல் போயுள்ளார். அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அந்தப் பெண் கடைசியாக கிஸ்தப்பாவை சந்தித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் படிக்க | நாடாளுமன்ற தாக்குதல் நடந்ததன் 22-ம் ஆண்டு நினைவு தினம்!
அவரிடம் விசாரித்தபோது, அந்த பெண்ணுடன் தான் பேசியதாகவும், ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் தெரியாது என்றும் கிஸ்தப்பா கூறியுள்ளார். ஆனால், அவரது நடத்தை மற்றும் பதில்கள் சரியாக இல்லாததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன்பிறகு நடந்த முழுமையான விசாரணையின் கிஸ்தப்பா தான் அந்த பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
விசாரணையில் கிஸ்தப்பா கடைசியாக கொன்ற பெண்ணை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று சேலையால் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. கிஸ்தப்பா அந்தப் பெண்ணிடம் இருந்து பணம் மற்றும் வெள்ளிக் கொலுசுகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிஸ்தப்பா இந்த பெண்ணுக்கு முன் கிட்டதட்ட 6 பெண்களை கொன்றுள்ளாராம். கூலிவேலை செய்யும் பெண்களை குறிவைத்து அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கிக்கொடுப்பதாகக் கூறி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று அவர்களை கொடூரமாக கொன்றுள்ளார். அவர்களிடம் இருந்து செயின், பணம், கொலுசு ஆகியவற்றை திருடிக்கொண்டு சடலங்களை அடையாளம் தெரியாமல் அழித்து வீசிவிட்டு சென்றுவிடுவாராம். இந்த திடுக்கிடும் தகவல்களை போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள கிஸ்தப்பாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | பெட்ரோல் போடும்போது இப்படி பண்ணாதீங்க! சிறுமி பரிதாப பலி - திடுக்கிடும் சம்பவம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ