ITR filing: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
பொதுவாக வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாளாக இருக்கும்.
2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யவதற்கான கடைசி நாள் 2021 டிசம்பர் 31, என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய மார்ச் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக வருமான வரி தாக்கல் (ITR Filing) செய்ய ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாளாக இருக்கும். ஆனால், கொரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாகவும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரித் தளத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாகவும், முதலில் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும், மற்றும் டிசம்பர் 31ம் தேதி வரையிலும் என இரண்டு முறை வருமான வரி தாக்கல் செய்யவதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டது.
வருமான வரித் துறையும், இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவ்ப்பை வெளியிட்டுள்ளது.
ALSO READ | அதிகரிக்கும் தொற்றின் எதிரொலி: தனியார் நிறுவன ஊழியர்கள் WFH செய்ய அரசு உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR