2021-2022ம் ஆண்டிற்கான வருமான வரிக்கணக்கை (ITR ) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர்-31 ஆகும். வருமான வரித்துறை சில மாற்றங்களை அறிவித்துள்ளது. அதனால் வருமான வரி செலுத்துவோர் ITR தாக்கல் செய்யும் போது வருமான வரித்துறை விதித்த மாற்றங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது, வரி செலுத்துவோர் தங்கள் டிவிடெண்ட் வருமானத்தை (dividend income) காலாண்டு வாரியாக பிரிக்க வேண்டும். இது வருமான வரி செலுத்துவதைச் சேமிக்க உதவும்.
ALSO READ | அசத்தல் திட்டம்! அஞ்சலகத்தில் 500 ரூபாய் செலுத்தினால் 1.5 லட்சம் பெறலாம்!
AY 2021-22க்கான ITR ஐ தாக்கல் செய்யும் போது வரி செலுத்துவோர் நினைவில் கொள்ள வேண்டிய டிவிடெண்ட் வருமான வரியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து SAG இன்ஃபோடெக்கின் MD, அமித் குப்தா கூறுகையில், “நிதியாண்டு FY21க்கு முன் , ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ரூ.10 லட்சம் வரையிலான டிவிடெண்ட் வருமானம் வரி செலுத்துவோருக்கு வரி விதிக்கவில்லை. ஏனென்றால் நிறுவனங்கள் டிவிடெண்ட் விநியோக வரியை (DDT) செலுத்த வேண்டும். ஆனால், ரூ.10 லட்சத்துக்கு மேல் டிவிடெண்ட் வருமானத்தை பெற்றவர்கள் டிவிடெண்ட் வருமானத்தில் 10 சதவீத வரியை மட்டுமே செலுத்தி வந்தனர். FY21 விளைவின்படி, அரசு ஒரு நிறுவனத்தால் வழங்கும் டிவிடெண்ட் பண்டுக்கு வரி விதித்தது.
AY 2021-22க்கான ITR தாக்கல் செய்யும் போது, வருமான வரி செலுத்துபவர்கள் காலாண்டு வாரியாக டிவிடெண்ட் வருமானத்தை பற்றி கூறுமாறு அறிவுறுத்திய மும்பையைச் சேர்ந்த வரி மற்றும் முதலீட்டு நிபுணர் பல்வந்த் ஜெயின் கூறுகையில், “ஏற்கனவே வரியை செலுத்துவதில் தவறிப்போன வட்டியைக் கணக்கிடுவதற்காக, வரி செலுத்துபவர்கள் ஒரு நிதியாண்டில் பெறப்பட்ட டிவிடெண்ட் வருமானத்தை காலாண்டு வாரியாக பிரித்து கொடுக்க வேண்டும். வரி செலுத்துவோர் டிவிடெண்ட் வருமானம் பெற்ற காலாண்டில் ஏற்கனவே வரி செலுத்த வேண்டியிருப்பதால், வருமான வரி செலுத்துவோருக்கு இது சேமிக்க உதவும்.
சாதாரண வருமான வரி செலுத்துபவருக்கு கூட, டிவிடெண்ட் வருமானம் இருந்தால், அதை காலாண்டு வாரியாக பிரித்து தெரிவிக்க வேண்டும், அவ்வாறு தெரிவிக்காத பட்சத்தில் அவர்களின் ITR படிவம் நிராகரிக்கப்பட்டு விடும். மேலும் அவர்கள் கூறுகையில், டிவிடெண்ட் வருமானத்தின் மீதான வரியை முன்னரே செலுத்தாததால் வட்டிக்கு விதிக்கப்படும் அபராதத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் டிவிடெண்ட் வருமானம் வரி செலுத்துவோருக்கு முன்னதாகவே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் வருமான வரித்துறை நிறுவனங்கள் செலுத்தப்பட்ட டிவிடென்ட் தகவலை பற்றி தெரிவிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
ஒருவரின் ITR படிவத்தை நிராகரிப்பதைத் தவிர்க்க, வரி செலுத்துவோர் டிவிடெண்ட் வருமானத்தை பிரிப்பதைப் புகாரளிக்க வேண்டும்:
1) 1 ஏப்ரல் 2020 முதல் 15 ஜூன் 2020 வரை;
2) 16 ஜூன் 2020 முதல் செப்டம்பர் 15 வரை;
3) 16 செப்டம்பர் 2020 முதல் 15 டிசம்பர் 2020 வரை;
4) 16 டிசம்பர் 2020 முதல் 15 மார்ச் 2021 வரை; மற்றும்
5) 16 மார்ச் 2021 முதல் 31 மார்ச் 2021 வரை.
ALSO READ | கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கான புதிய விதிமுறைகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR