இந்தியா சீனா பதற்றம்: திரும்பி சென்ற சீன வீரர்கள்!! 25 நாட்களுக்குப் பிறகு அமைதி!!
கிழக்கு லடாக்கில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்த இரத்தக்களரி மோதலை அடுத்து, 25 நாட்களுக்குப் பிறகு இயல்வு நிலைக்கு திரும்பியுள்ளது.
புது டெல்லி: கிழக்கு லடாக்கில் (Ladkah) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்த இரத்தக்களரி மோதல், 25 நாட்களுக்குப் பிறகு இயல்வு நிலைக்கு திரும்பியுள்ளது. ரோந்து புள்ளி 17 (ஹாட் ஸ்பிரிங் பகுதி) இல் சீன துருப்புக்களை திரும்பப் பெறுவது இன்று நிறைவடைந்துள்ளது. ரோந்து புள்ளி-14, ரோந்து புள்ளி -15 மற்றும் ரோந்து புள்ளி -17 ஆகிய இடங்களில் இருந்து துருப்புகள் பின்வாங்குவதற்கான செயல்முறை ஒரே நாளில் முடிந்துவிட்டதாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐயின் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லடாக்கின் பிங்கர் பகுதியிலிருந்து சீன இராணுவம் விலகிக் கொண்டிருக்கிறது எனவும் கூறப்பட்டு உள்ளது.
READ MORE | LAC பகுதியில் இரவு ரோந்து பணி... எச்சரிக்கையுடன் செயல்படும் இந்திய விமான படை..!!
சீன துருப்புக்கள் வியாழக்கிழமை ஹாட் ஸ்பிரிங் (Galwan Valley) பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை பின்வாங்கினர். இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒப்பந்தத்தின் கீழ், சீன துருப்புக்கள் ரோந்து புள்ளி 14, ரோந்து புள்ளி -15, ரோந்து புள்ளி 17 மற்றும் ரோந்து புள்ளி 17 ஏ பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பின்வாங்கியுள்ளனர். இதன் மூலம் இந்திய ராணுவமும் இந்த இடங்களிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பின்வாங்கியுள்ளது. அதன் ரோந்துப் புள்ளிகளாக இருந்த பகுதிகளிலிருந்து மே முதல் வாரம் முதல் மோதல் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம், இருநாடுகளுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control) அருகே சீனர்கள் கட்டுமானத்தைத் தொடங்கியதால் மோதல் ஏற்பட்டது. ஜூன் 15 அன்று நடந்த மோதலை அடுத்து, இதுபோன்ற மோதல்கள் இனிமே இருக்கக்கூடாது என இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர ஒப்பந்தம் எட்டப்பட்டது எனவும் ANI செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
READ MORE | இந்தியாவின் பராக்கிரமத்தை கண்டு அஞ்சி லடாக்கில் பின் வாங்கும் சீனா...!!!
இரு நாடுகளுக்கும் இடையே மேல்மட்டத்தில் பேச்சுவார்த்தை:
கிழக்கு லடாக்கில் மே முதல் வாரத்தில், எல்.ஏ.சி. பகுதியில் சீன துருப்புக்கள் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து, இரு நாடுகளுக்கிடையில் இரண்டு முறை இராணுவ (Indian Army) மற்றும் இராஜதந்திர அளவிலான பேச்சுவார்த்தைகள் நடந்தன, ஜூன் 6 ம் தேதி கார்ப்ஸ் கமாண்டர்களின் முதல் கூட்டத்தில், எல்.ஏ.சி பகுதில் அத்துமீறல் பிரச்சினையைத் தீர்க்க ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் கால்வன் பள்ளத்தாக்கில் வன்முறை மோதலுக்குப் பிறகு, நிலைமை மிகவும் தீவிரமானது என்பது குறிப்பிடத்தக்கது.