தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்கிறது என்று ஐ.நா., சபையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'பெல்லட்' குண்டுகளை இந்தியா பயன்படுத்துகிறது என்று பாகிஸ்தான் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்கு ஆதாரமாக, ஐ.நா.,வுக்கான பாகிஸ்தான் தூதர், மலீஹா லோதி, ஒரு படத்தை காட்டினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த, 2014-ம் ஆண்டு பாலஸ்தீனத்தின் காசா பகுதியில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய விமானப் படை தாக்குதலில் ஒரு இளம்பெண் காயமடைந்தார். அந்தப் படத்தைக் காட்டி, ஜம்மு - காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் காயமடைந்ததாக ,லோதி கூறினார்.


இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஐ.நா., சபையில், இந்திய துணை தூதரக அதிகாரி பலோமி திரிபாதி அளித்த பதில்:-


தவறான படத்தை காட்டி, சர்வதேச பயங்கரவாத மையமாக திகழும் பாகிஸ்தான் மீது ஐ.நா., கவனம் செலுத்துவதை திசை திருப்ப பாகிஸ்தான் தூதர், முயற்சி செய்துள்ளார். அவர் காட்டிய படத்தில் இருக்கும் பெண் பாலஸ்தீனத்தை சேர்ந்த ராவ்யா அபு ஜாம். இந்த புகைப்படத்தை கடந்த 2014 ஜூலை 22-ம் தேதி அன்று அமெரிக்க கலைஞர் எடுத்தது. 


இந்த படம் அந்நாட்டு பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது. இந்த படத்தை வைத்து, இந்தியாவுக்கு தவரான பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஐ.நா.,வை பாகிஸ்தான் தவறாக வழிநடத்தியுள்ளது எனக்கூறினார்.


காஷ்மீரில் தினமும், எல்லை தாண்டிய பயங்கரவாதிகளால் ஏற்படும் துயரத்தையும் பிரச்னையையும் வெளிக்காட்டுகிறது. பாகிஸ்தான் தனது உண்மை முகத்தை யாரிடமும் மறைக்க முடியாது. 


இவ்வாறு அவர் பேசினார்.