Congress Guarantee vs BJP Guarantee: இந்த முறை மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் "உத்தரவாதம்" என்ற வார்த்தை அதிகமாக உச்சரிக்கப்படுகிறது. தேர்தல் பேரணியில் பங்கேற்று வரும் பிரதமர் நரேந்திர மோடி, தனது ஒவ்வொரு தேர்தல் பரப்புரையின் போது "மோடியின் உத்தரவாதம்" என்ற அடிப்படையில் மக்கள் மத்தியில் பேசி வருகிறார். மோடியின் உத்தரவாதத்திற்கு பதிலடியாக காங்கிரசும் தனது உத்தரவாதத்தை முன்வைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய கட்சிகளின் "உத்தரவாதம்"


தேர்தல் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்து வரும் நிலையில், வீடு வீடாகச் சென்று உத்தரவாதங்களை விநியோகிக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. இன்று முதல் வீடு வீடாகச் சென்று "ஒவ்வொரு வீட்டுக்கும் உத்தரவாதம்" என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. 


மக்களவைத் தேர்தல் சதுரங்க போட்டியில் வெல்வது யார்?


இதன்மூலம் மக்களவைத் தேர்தல் 2024 என்ற சதுரங்க போட்டியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டு தேசிய கட்சிகளும் "உத்தரவாதம்" என்ற திட்டத்தின் கீழ் மக்களின் இதயங்களில் இடத்தைப் பிடிக்க முயற்சிக்கின்றன. மோடியின் உத்தரவாதத்தை உடைக்க காங்கிரஸ் உத்தரவாதத்தை கையில் எடுத்துள்ளது. எந்த "உத்தரவாதம்" தேர்தலில் வெல்லும் என்பதை தெரிந்துக்கொள்ள ஜூன் 4 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டியிருக்கும். 


ஏனென்றால், 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டம் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதி கட்டமான ஏழாவது கட்டம் வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. அடுத்து மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.


மேலும் படிக்க - Zee News தேர்தல் கருத்துக்கணிப்பு: மோடி vs ராகுல்... அரியணை ஏறப்போவது யார்?


காங்கிரஸின் "ஒவ்வொரு வீட்டுக்கும்  உத்தரவாதம்"


டெல்லியின் வடகிழக்கு மக்களவைத் தொகுதியில் இருந்து வீடு வீடாகச் சென்று "ஒவ்வொரு வீட்டுக்கும்  உத்தரவாதப்" பிரச்சாரத்தை காங்கிரஸ் இன்று தொடங்கியது. காங்கிரஸின் உத்தரவாதங்கள் அட்டையில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. காங்கிரஸ் தலைவா் காா்கே தொடங்கி வைத்த "ஒவ்வொரு வீட்டுக்கும்  உத்தரவாதம்" பிரசாரத்தில், உத்தரவாத அட்டைகள் 14 மொழிகளில் விநியோகிக்கப்படும். இந்த உத்தரவாத அட்டைகளை நாட்டில் உள்ள 8 கோடி குடும்பங்களிடம் காங்கிரஸ் தொண்டா்கள் அடுத்த சில வாரங்களில் வழங்க உள்ளனா்" என மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளார்.


பாரத் ஜோடோ யாத்திரை: ​​ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி


பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ​​ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே சில வாக்குறுதிகளை அளித்தனர். அவை உத்தரவாத அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் காங்கிரஸ் கட்சியின் 5 நீதிக் கொள்கை மற்றும் 25 உத்தரவாதமும் அட்டையில் இடம் பெற்றுள்ளது. 


காங்கிரஸ் கட்சியின் 5 நீதிக் கொள்கை  உத்தரவாதம்


- நீதியை நிலைநாட்டுதல்


- விவசாயிகளுக்கான நீதி


- தொழிலாளர் நீதி


- இளைஞர்களுக்கான நீதி


- பெண்களுக்கான நீதி


மேலும் படிக்க - பாஜக வெற்றி பெற்றால் நாடு பற்றி எரியுமா? அவர்கள் மூட்டிய தீயை 10 ஆண்டுகளாக அணைத்து வருகிறேன் -மோடி


மக்களவைத் தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை


காங்கிரஸின் இந்த உத்தரவாதங்களும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படும் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 2 நாட்களுக்கு பிறகு அதாவது வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) வெளியிடப்படும். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 


காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எப்பொழுது வெளியிடப்படும்?


ஏப்ரல் 6 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் மெகா பேரணியில் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர். அன்றைய தினம் ஐதராபாத்தில் நடைபெறும் மெகா பேரணியில் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.


மேலும் படிக்க - 'மக்களவை தேர்தலில் போட்டியிட பணமில்லை...' நிர்மலா சீதாராமன் கூறும் காரணங்கள்!


மக்களவைத் தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை


மறுபுறம், பாஜக தனது தேர்தல் அறிக்கையை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக உள்ளது. 2047ல் மோடியின் உத்தரவாதம் மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கருப்பொருளில் பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்கும். பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மல்லவைத் தேர்தலை அடுத்து, காங்கிரஸும், பாஜகவும் பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளித்து வருகின்றன. பொதுமக்கள் யாருடைய உத்தரவாதத்தை நம்புவார்கள்? யாரை ஆட்சி அமைக்க தேர்ந்தெடுப்பார்கள் என்பதை இனி பார்க்க வேண்டும்.


மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைத் தேர்தல்


ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களும், பீகார், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது


மேலும் படிக்க - குஜராத் பிஜேபியில் அரசியல் குழப்பம்.. இந்தமுறை பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ