புதுடெல்லி: இந்தியாவில் செவ்வாய்க்கிழமை 1.9 கோடிக்கு மேலானோருக்கு கோவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தலைப் பொறுத்தவரை, இது இதுவரை இல்லாத அளவிலான பெரிய ஒரு நாள் எண்ணிக்கை ஆகும். மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை, 1.9 கோடி பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாள் முழுவதுக்குமான எண்ணிக்கை (6 மணிக்கு மேல்) இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

”பிரதமர் @NarendraModi அவர்களின் தலைமையின் கீழ், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தில் மற்றொரு மைல்கல் அடையப்பட்டது. 50 கோடி மக்கள் முதல் #COVID19 தடுப்பூசி டோஸ்களைப் பெற்றனர். இந்த மகத்தான சாதனையை அடைய உதவிய COVID-19 கள வீரர்களின் கடின உழைப்பையும் குடிமக்களின் விடாமுயற்சியையும் நான் பாராட்டுகிறேன்” என்று மாண்டவியா ட்வீட் செய்துள்ளார்.


"வாழ்த்துக்கள், இன்று இந்தியாவில் 1 கோடி பேருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் (COVID Vaccination) செலுத்தப்பட்டன. இன்று மாலை 6 மணி வரை 1.09 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன. இது மிக அதிக அளவிலான, சாதனை அளவிலான ஒரு நாள் எண்ணிக்கையாகும். இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  பிரதமர் @NarendraModi அவர்களின் தலைமையின் கீழ், இந்தியா கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடுகிறது” என்று அவர் மற்றொரு ட்வீட்டில் கூறினார்.


ALSO READ: COVID-19: கேரளா, மகாராஷ்டிரா அரசுக்கு கடிதம் மூலம் மத்திய அரசு உத்தரவு


10 கோடி என்ற அளவை இந்தியா 85 நாட்களில் எட்டியது. பின்னர் 20 கோடி என்ற அளவை எட்ட இந்தியாவுக்கு 45 நாட்கள் ஆனது, 30 கோடியை எட்ட 29 நாட்கள் ஆனது. நாடு 40 கோடியை எட்ட 24 நாட்கள் ஆனது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி 50 கோடி தடுப்பூசிகள் என்ற அளவை கடக்க இன்னும் 20 நாட்கள் ஆனது. ஆகஸ்ட் 25 அன்று 60 கோடி இலக்கை கடக்க இன்னும் 19 நாட்கள் ஆனது.


நாடு தழுவிய தடுப்பூசி செயல்முறை ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கியது. கட்டம் கட்டமாக நடந்த இந்த செயல்முறையில், முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு (HCWs) தடுப்பூசி போடப்பட்டது. முன்னணி தொழிலாளர்களுக்கான (FLWs) தடுப்பூசி செயல்முறை பிப்ரவரி 2 முதல் தொடங்கியது.


கோவிட் -19 தடுப்பூசியின் அடுத்த கட்டம் மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட குறிப்பிட்ட இணைநோய்கள் உள்ளவர்களுக்கும் தொடங்கியது. ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.


பின்னர், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1 முதல் தடுப்பூசி போட அனுமதித்து அரசாங்கம் (Government) தடுப்பூசி திட்டத்தை விரிவாக்க முடிவு செய்தது.


ALSO READ:இந்திய கலாச்சாரம், ஆன்மீகம் உலகளவில் பிரபலமடைந்து வருகிறது: பிரதமர் மோடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR