Priyanka Gandhi Vadra Latest News in Tamil: ஆரம்பத்தில் அரசியலில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத பிரியங்கா காந்தி, தற்போது முழுமையான ஒரு சமூக போராளியாக அரசியல் களத்தில் குதித்துள்ளார். இது நிச்சயமாக காங்கிரஸ் கட்சிக்கு பலத்தை சேர்க்குமா? அவரின் அரசியல் பயணம் குறித்து பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார் இதன் மூலம் முதல் முறையாக அவர் தேர்தல் களத்தில் கால் பதித்திருக்கிறார். அவரது இந்த பரிமாணம் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும் என அரசியல் நோக்கங்கள் கணித்திருக்கிறார்கள்


ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு (Wayanad) மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி (Raebareli) ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்ற அவர், சட்ட விதிகளின்படி ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக்கொண்டு வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.


வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், தற்போது அந்த தொகுதிக்கு நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த 2024  நாடாளுமன்றத் தேர்தல் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி சுமார் 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 


தற்போது நடைபெறும் வயநாடு இடைத்தேர்தலில் ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியை களம் இறக்க கட்சி ஏற்கனவே முடிவு செய்திருந்தது.


அதன் அடிப்படையில் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். 


இதுக்குறித்து ராகுல் காந்தி கூறுகையில், இந்த தொகுதியில் தனது சகோதரியை விட சிறந்த ஒரு பிரதிநிதியை தன்னால் கற்பனை செய்ய முடியாது எனக் கூறியிருந்தார். மேலும் மக்களின் சக்தி வாய்ந்த குரலாக நாடாளுமன்றத்தில் பிரியங்காவின் குரல் எதிரொலிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 


அரசியல் பாரம்பரிய கொண்ட நேருக்கு குடும்பத்தில் அவருக்குப் பிறகு அவரது மகள் அன்னை இந்திரா காந்தி இந்திய அரசியலின் மிகப்பெரும் ஆளுமையாக திகழ்ந்தார். காங்கிரஸ் கட்சியின் முகமாகவும் அவர் சுடர் விட்டு பிரகாசித்தார். அவருக்கு பிறகு இந்திராவின் மருமகளான மேனகா காந்தி அரசியல் களத்திற்கு வந்தார். ஆனால் குடும்பப் பிரச்சனைகள் காரணமாக அவர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே செயல்பட்டதோடு, எதிர்கட்சி முகாமில் போய் சேர்ந்தார்.


ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்திற்கு பிறகு, சோனியா காந்தி உள்ளிட்ட காந்தி அவரது குடும்பத்தினர் அரசியலில் இருந்து முற்றிலும் விலகி இருக்க நினைத்தனர். ஆனால் காலச்சுழலும் காங்கிரஸ் தலைமையும் கொடுத்த நிர்ப்பந்தத்தால் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு வந்தார். 


நேரு குடும்பத்தின் மூன்றாவது அரசியல் பெண் வாரிசாக இவர் களவெறுங்கினார். நேரு குடும்பத்தின் அரசியல் பாரம்பரியத்தை கட்டிக் காக்கும் பணியை இவர் கச்சிதமாக செய்து கொண்டிருக்கும், அதே வேளையில் அவரது மகன் ராகுல் காந்தி மிக சரியான நேரத்தில் அரசியல் களத்திற்குள் நுழைந்து. இன்று காங்கிரஸின் நட்சத்திர தலைவராக பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.


சவால்களும், சூழ்ச்சிகளும் நிறைந்த தேசிய அரசியல் களத்தில் ராகுல் காந்திக்கு எல்லா வகையிலும் உற்ற துணையாகவும் பக்கபலமாகவும் இருந்து வரும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி, ஆரம்பத்தில் அரசியலில் இருந்து சற்று தள்ளி இருந்தாலும், அதன் பின்னர் நாட்டின் நலன் கருதியும், காங்கிரஸ் கட்சியை உயிர்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அரசியலை அங்குலம் அங்குலமாக கற்று, இன்று ஒரு முயற்சி பெற்ற தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். 


ஆரம்பத்தில் சோனியா காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் பிரியங்கா காந்தி முகம் காட்டத் தொடங்கினார். 2004 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது தனது அம்மா சோனியா காந்தி பிரச்சாரத்திற்கான மேலாளர் பொறுப்பை ஏற்றவர் பிரியங்கா என்பது பலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. 


2007 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையான சவாலை சந்தித்த வேளையில், தீவிர அரசியலில் இறங்கிய அனைத்து பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களின் மனங்களை பெற்றார் பிரியங்கா காந்தி. பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சிக்காகப் பிரசாரம் மேற்கொண்டார். அன்னை இந்திராகாந்தியின் மறு உருவமாகவே மக்கள் அவரை பார்க்கத் தொடங்கினர்.


2019 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் அமர்த்தபட்டார். கட்சியின் சட்டதிட்டங்களை உள்வாங்கியதோடு கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை எப்படி அணுகுவது களப்பணியில் அவர்களை எப்படி எல்லாம் ஈடுபடுத்துவது என்ற வித்தைகளையும் கற்க தொடங்கினார். 


இதனை தொடர்ந்து கடந்து 2020 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் முழு பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். தனது தாத்தா நேரு, பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் அரசியல் தளமாக திகழ்ந்த உத்தர பிரதேசத்தையே பிரியங்காவின் தளமாக கொண்டு செயல்பட்டார். 


உத்தரப்பிரதேசம் களம் அவருக்கு எதிராக இருந்த போதிலும் அங்கு ஒரு அரசியல் சூறாவளியாகவே செயல்படத் தொடங்கினார். கடந்த 2021 ஆம் ஆண்டு மாநிலத்தின் லக்கி பகுதியில் விவசாயிகளுக்கு எதிரான மாநில அரசின் அடக்குமுறைகளை கண்டித்து ஆவேசத்துடன் செயல்பட்டதால், இரண்டு முறை காவல்துறையால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார் பிரியங்கா காந்தி. 


இதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்திலும் பங்கேற்று காவல்துறையால் கைது நடவடிக்கைக்கு உள்ளானார். 


தோல்வி எனும் தடைகளை கொண்டுதான் வெற்றி எனும் கோட்டையை உருவாக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப கடந்த உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் அவர் கடுமையாக பணியாற்றினார் என்றாலும், அங்கு காங்கிரசுக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டதால் அதன் பிறகு பல மடங்கு வீரியத்தோடு கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்றார். 


பிரியங்கா தொடர்ந்து செயல்பட்டார். காங்கிரசின் பலத்தை நிரூபிக்க தொடங்கினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்காவின் தேர்தல் பிரச்சாரம் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. அப்போது அவர் ஒரு பிரச்சார பீரங்கியாக செயல்பட்டார். 


உத்திரபிரதேசம், பீகார், அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இவருக்கு பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதற்கு ஏற்ப காங்கிரஸ் கட்சி அதற்கு முந்தைய தேர்தலில் வெற்றி பெற்றதை காட்டிலும் கூடுதல் இடங்களில் வெற்றிகள் பெற்றது. அதற்கு மக்களின் மனங்களை எளிதில் சென்றடையும் பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. 


தொடக்கத்தில் அரசியலில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத பிரியங்கா காந்தி, அதன் பிறகு அரசியல் தளத்தில் தனது குடும்பம் கொண்டிருக்கும் பாரம்பரிய உறவு காங்கிரஸ் கட்சி சந்திக்கும் சவால்கள் அரசியல் அரங்கில் தனது சகோதரர் ராகுல் காந்திக்கு பக்கபலமாக இருக்க வேண்டியது அவசியம் என எல்லாவற்றையும் உணர்ந்து தற்போது அவர் முழுமையான ஒரு சமூக போராளியாக அரசியல் களத்தில் குதித்துள்ளார். இது நிச்சயமாக காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தொண்டர்களுக்கு பலத்தை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.


மேலும் படிக்க - வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தியின் சொத்து விவரம்!


மேலும் படிக்க - Wayanad by-election: யார் இந்த நவ்யா ஹரிதாஸ்? பிரியங்காவை தோற்கடிக்க பாஜக புதிய யுக்தி!


மேலும் படிக்க - வயநாட்டில் போட்டியிடும் பிரியங்கா காந்தி... ராய்பரேலியை தக்கவைக்கும் ராகுல் - ஸ்வீட் சர்ப்ரைஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ