இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரி ஒருவர் தனது பெயரையும், பாலினத்தையும் மாற்றுமாறு மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். அவரது கோரிக்கையை தற்போது மத்திய அரசு ஏற்று பெயர் மற்றும் பாலினத்தை மாற்றி நடவடிக்கை  எடுத்துள்ளது. இந்திய சிவில் சர்வீஸ் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த உத்தரவின்படி அனுசுயா என்ற தனது பெயரை அனுகதிர் சூர்யா என்றும், அவரது பாலினத்தை பெண்ணிலிருந்து ஆணாகவும் மாற்றி கொண்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்றும், பாலின பன்முகத்தன்மைக்கான அணுகுமுறைகளில் மாற்றத்தை பிரதிபலிக்கும் என்று தெரிவிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் பணம் வந்தவுடன் காதலனுடன் தப்பியோடிய 11 மனைவிகள்!


யார் இந்த அனுசுயா?


சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அனுசுயா அரசின் அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றி அமைத்துள்ளார். சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். மேலும், கடந்த ஆண்டு சைபர் சட்டம் மற்றும் தடயவியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ பெற்றுள்ளார். தற்போது 35 வயதாகும் அனுசுயா ஹைதராபாத்தில் உள்ள சுங்க வரித்துறையில் இணை ஆணையராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2013ல் சென்னை நகரில் உதவி ஆணையராக தனது பணியை தொடங்கி உள்ளார். பிறகு 2018ம் ஆண்டு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார். 2023ம் ஆண்டு முதல் ஹைதராபாத்தில் பணி புரிந்து வருகிறார்.


நிதியமைச்சகம் ஒப்புதல்


அதிகாரி அனுசுயா வைத்த கோரிக்கையை ஏற்ற மத்திய நிதி அமைச்சகம், "அனுசுயாவின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் அரசின் அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் அனுகதிர் சூர்யா என்று மாற்றப்படும்" என்று தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு முதன்மை ஆணையர் (AR), சுங்கம், கலால், சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மற்றும் CBIC இன் கீழ் அனைத்து முதன்மை தலைமை ஆணையர்கள்/பிஆர் டைரக்டர் ஜெனரல் ஆகியோருக்கு பொருந்தும். இது ஒரு நல்ல உத்தரவு, இந்த முடிவு இந்தியாவில் உள்ள மற்ற ஊழியர்களையும் ஊக்குவிக்கும் என்று மற்றொரு மூத்த ஐஆர்எஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | உச்சநீதிமன்ற விசாரணைக்கு பனியனுடன் வந்த நபர்! வெளியே போக சொன்ன நீதிபதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ