விராட் கோலியின் பப் மீது வழக்கு... இந்த விதிமுறையை மீறியதாம்... முழு விவரம்

Virat Kohli One8 Commune Pub: பெங்களூருவில் உள்ள விராட் கோலியின் பப் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 9, 2024, 01:58 PM IST
  • அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பப் இயங்கி உள்ளது.
  • அதிக சத்தத்தில் பாட்டை ஒலிக்கவிட்டதாகவும் புகார் வந்துள்ளது.
  • போலீசார் நேரில் சென்று பார்த்து வழக்கை பதிவிட்டுள்ளனர்.
விராட் கோலியின் பப் மீது வழக்கு... இந்த விதிமுறையை மீறியதாம்... முழு விவரம் title=

Case Filed On Virat Kohli One8 Commune Pub: பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி நாட்டின் முக்கிய பெருநகரங்களில் One8 Commune என்ற பெயரில் சொகுசு உணவகம் நடத்தி வருகிறார். 2017ஆம் ஆண்டு தொடங்கிய விராட் கோலியின் One8 Commune டெல்லி, மும்பை, புனே, கொல்க்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் ஹைதராபாத் நகரின் ஹை-டெக் சிட்டியில் இந்த சொகுசு உணவகம் புதிதாக திறக்கப்பட்டது.

இதில் உணவுகள் மட்டுமின்றி மதுபானங்கள் மற்றும் பார்ட்டி நடக்கும் பப் வசதியும் உள்ளது. அந்த வகையில், பெங்களூருவில் செயல்படும் விராட் கோலியின் One8 Commune பப்பின் மீது விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் முழு விவரத்தையும் இங்கு தெரிந்துகொள்ளலாம். 

விதிமுறைகளை மீறியதால்...

கர்நாடக தலைநகர் பெங்களூருவின் எம்ஜி ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் One8 Commune பப் மற்றும் உணவகம் விதிமுறைகளை மீறி அதிக நேரம் வரை செயல்பட்டதாக பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, நள்ளிரவு 1 மணிவரைதான் இந்த பப் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பப் 1.30 மணிவரை செயல்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | இந்தி தெரியாததால் இந்திய அணியில் வாய்ப்பு தரவில்லையா...? நடராஜன் பேசியது என்ன?

மேலும், நள்ளிரவில் அங்கு அதிக சத்தத்தில் பாட்டு இசைக்கப்படுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்ததை அடுத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். விதிமுறையை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட இந்த பப், பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது. இந்த பெங்களூரு கிளை என்பது கடந்த டிசம்பர் மாதமே திறக்கப்பட்டுள்ளது. ரத்னம்ஸ் காம்ப்ளேக்ஸில் ஆறாவது தளத்தில் இந்த பப் செயல்பட்டு வருகிறது. 

மேலாளர் மீது வழக்குப்பதிவு

இதுகுறித்து போலீசார் கருத்து தெரிவிக்கையில்,"நள்ளிரவில் அதிக சத்தத்துடன் பாட்டு இசைக்கப்படுவதாக எங்களுக்கு புகார்கள் வந்தன. மேலும், தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அதன்பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். போலீசார் ஹோட்டலுக்கு விரைந்தபோது அவர்கள் விதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வந்ததை பார்த்ததை அடுத்தே அந்த பப்பின் மேலாளர் மீது வழக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. 

தலைப்புச் செய்தியில் One8 Commune

கடந்தாண்டு One8 Commune மும்பை கிளையில் தமிழர் ஒருவரை வேட்டி உடை அணிந்திருந்தால் உணவகத்திற்குள் அனுமதிக்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த தமிழர் அவரது சமூக வலைதளப்பக்கங்களில் அதுகுறித்து குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த உணவகத்தாரின் செயலால் தான் மிகவும் ஏமாற்றமடைந்ததாகவும், மனது காயம்பட்டதாகவும் கூறியிருந்தார். 

மேலும், One8 Commune டெல்லி கிளை கடந்தாண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. ஏனென்றால், ஃபோனோகிராஃபிக் பெர்ஃபார்மென்ஸ் லிமிடெட் (Phonographic Performance Limited) நிறுவனம் பதிப்புரிமை பெற்றுள்ள பாடல்களை இசைக்க One8 கம்யூனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடந்தாண்டு தடை விதித்திருந்தது. 

லண்டனில் விராட் கோலி?

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் நாடு திரும்பிய விராட் கோலி, டெல்லியில் பிரதமரை சந்தித்துவிட்டு, மும்பையில் இந்திய அணியின் ரோட் ஷோ மற்றும் வான்கடேவில் நடைபெற்ற பாராட்டு விழாவிலும் கலந்துகொண்ட பின்னர் லண்டனுக்கு பறந்தார். அங்குதான் தற்போது குடியிருக்கிறார் எனலாம். அனுஷ்கா சர்மா - விராட் கோலி ஜோடி கடந்த பிப்ரவரி மாதம் மகனை பெற்றெடுத்த நிலையில், அனுஷ்காவின் கர்ப்ப காலத்திலேயே அமைதியான மற்றும் யாருக்கும் தெரியாத சூழல் வேண்டும் என்பதை மனதில் வைத்து யாருக்குமே தெரியாத ரகசிய இடத்திற்கு குடிபெயர்ந்தனர். இதனை விராட் கோலியே ஐபிஎல் சமயத்தில் கூறியிருந்தார். 

மேலும் படிக்க | ரோஹித், விராட்டுக்கு ரெஸ்ட்? கேப்டன்ஸிக்கு அடித்துக்கொள்ளப் போகும் இந்த 2 வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News