உடுப்பியில் கண்டறியப்பட்ட megalithic சகாப்தத்தைச் குகை தெரிவிக்கும் செய்தி என்ன?
உடுப்பி மாவட்டத்தில் பனியாடியில் உள்ள ஸ்ரீ அனந்த பத்மநாப கோயிலின் புனரமைப்பு பணிகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அங்கு megalithic சகாப்தத்தைச் குகை இருப்பது கண்டறியப்பட்டது.
மங்களூரு: உடுப்பி மாவட்டத்தில் பனியாடியில் உள்ள ஸ்ரீ அனந்த பத்மநாப கோயிலின் புனரமைப்பு பணிகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அங்கு megalithic சகாப்தத்தைச் குகை இருப்பது கண்டறியப்பட்டது.
மிகப் பழமையான இவை megalithic காலத்தைச் சேர்ந்தவை என்று ஷிர்வாவில் உள்ள எம்.எஸ்.ஆர்.எஸ் கல்லூரியின் பண்டைய வரலாறு மற்றும் தொல்பொருளியல் இணை பேராசிரியர் T Murugeshi தெரிவிக்கிறார்.
முருகேஷி வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஆலய புனரமைப்பு நடைபெறும் இடத்திற்கு வியாழக்கிழமை நேரடியாக சென்று பார்த்தகாக தெரிவித்தார். அதை ஆய்வு செய்தபின் அது ஒரு பாறையில் குடையப்பட்ட குகை என்று கூறினார்.
இந்த குகை கிமு 800க்கு முந்தையவை என்றும் 2,000 ஆண்டுகள் பழமையானது என்று அவர் கூறினார். பவன்ஜே சுப்ரமண்யா கோயில், சூதா சுப்ரமண்யா கோயில், சாஸ்துரு சுப்ரமண்யா கோயில் மற்றும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் உள்ள பிற இடங்களில் இதேபோன்ற பாறையால் குடையப்பட்ட குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த கண்டுபிடிப்பு Phanis காலத்தைப் புரிந்து கொள்வதில் முக்கியத்துவமானது என்று முருகேஷி கூறினார். பானி மற்றும் ஹாடி (Pani and Haadi) ஆகியவை இணைந்து Paniyadiயை உருவாக்குகின்றன, அதாவது அந்த குறிப்பிட்ட Paniyadi மக்களின் குடியேற்றத்தைக் குறிப்பிடுகிறது.
மகாபாரதம் மற்றும் புராணங்களில் பானிகள் நாட்டின் பண்டைய அசல் குடிமக்கள் என்று குறிப்பிடப்பட்டனர்.
உடுப்பி மாவட்டத்தில் பனியூர், பனியாடி போன்ற இடங்கள் கடந்த காலங்களில் இந்த குறிபிட்ட சமூகத்தினரின் குடியேற்றங்கள் இருந்ததை உணர்த்துகின்றன.
Also Read | வாடிக்கையாகிவிட்ட தேர்தல் வேடிக்கைகள்: சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் சில சுவாரசியங்கள்
நாகா வழிபாடு செய்வதில் பானி சமூகத்தினர்கள் பிரபலமானவர்கள். பனியாடியின் முதன்மை தெய்வம் அனந்தா பதனபாவும் நாக வழிபாட்டுக்கு பிரசித்தமானவர். வைணவ மதத்தின் கடவுளான பரா வாசுதேவா, சுருண்டிருக்கும் நாகத்டின் மேல் அமர்ந்திருப்பார், அவரின் தலைக்கு மேலே நாகம் தலைதூக்கி நிற்கும்.
உடுப்பிக்கு அருகிலுள்ள கீலின்ஜேயில் இருக்கும் இதேபோன்ற ஒரு சின்னம் கி.பி 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, அதே சமயம் பனியாடி தெய்வம் கி.பி 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அவர் கூறினார்.
அனந்த பத்மநாப கோயில் உடுப்பி Puttige மடத்திற்கு சொந்தமானது, புனரமைப்புப் பணிகளை மடத்தினர் கிராமவாசிகளின் உதவியுடன் மேற்கொண்டனர்.
மார்ச் 23ஆம் தேதியன்று கோயிலுக்கு வெளிப்புறச் சுவரைக் கட்டுவதற்காக பூமியை தோண்டியபோது, கோவிலின் வடக்குப் பகுதியில் எட்டு அடி கீழே குகை இருப்பது கண்டறியப்பட்டது.
ALSO READ | TN Election 2021: வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் தவறு செய்துவிட்டதா அதிமுக?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR