கணவனாக இருந்தாலும் மனைவியின் சம்மதம் இல்லாமால் உறவு கொள்வது பாலியல் குற்றம்
கணவன், மனைவிக்கிடையே திருமண உறவு சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றாலும் பாலியல் உறவு என்று வரும்போது பெண்ணின் சம்மதம் முக்கியம் என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரளா: ஆண்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தாலும் அப்பெண் தனது மனைவி என்ற காரணத்திற்க்காக பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவரை அணுகுவது பாலியல் துன்புறுத்தலில் தான் அது சேரும். இப்படி ஒரு தீர்ப்பினை சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.
அந்த தீர்ப்பு குறித்து பார்ப்போம்:
கணவன், மனைவிக்கிடையே திருமண உறவு சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றாலும் பாலியல் உறவு என்று வரும்போது பெண்ணின் சம்மதம் முக்கியம் என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருடைய மனைவியின் கோரிக்கையை ஏற்று கேரள கீழ் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து அவருடைய கணவர் மேல்முறையீடு செய்திருந்தார். பிறகு கேரள உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை கையிலெடுத்து உறுதி செய்து தீர்ப்பளித்தது.
உயர் நதிமன்ற தீர்ப்பில், 'திருமணம் ஆகியிருந்தாலும் கணவன் தன்னுடைய மனைவியை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி பாலியல் உறவு கொண்டால் சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை என்று கருதி' பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கலாம்.
ALSO READ | மனைவியின் மனம் கவர் கணவனாக இருக்க சில டிப்ஸ்..!!!
திருமணம் சார்ந்த உறவுக்குள் பாலியல் வல்லுறவு குற்றம் அல்ல என்பதற்கான தடை செல்லுபடியாகாது என்று நீதிபதிகள் கூறினர். இந்திய தண்டனைச் சட்டம் 375வது பிரிவு கூறுவது என்னவென்றால் கணவன், மனைவியின் சம்மதத்தைப் பெறாமல் உறவு கொள்வது பாலியல் வல்லுறவு என்று வரையறை செய்கிறது.
அதேநேரத்தில் திருமண உறவில் ஒரு பெண்ணின் சம்மதத்தைப் பெறாமல் அப்பெண்ணினுடைய கணவன் உறவு கொள்வது இந்திய நாட்டில் குற்றம் அல்ல என்பதனை எதிர்த்து திருமண உறவுகுட்பட்ட பாலியல் வல்லுறவை சட்டப்படி குற்றமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என சில பெண்ணியவாதிகளும், முற்போக்காளர்களும், பாலின சமத்துவ செயற்பாட்டாளர்களும் நீண்டகாலமாக இதற்காக போராடி வருகின்றனர். திருமணம் ஆகிவிட்டது என்பதற்காக மனைவியின் விருப்பமில்லாமல் அவளை கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு கணவன் கொள்ளக்கூடாது.
"கணவன் என்பவர் வாழ்க்கையில் ஒரு துணை தானே தவிர சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலுக்கு உரிமையாளர் கிடையாது என கேரள உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இந்த தீர்ப்பினை அங்குள்ளவர்கள் முக்கியமானதொரு தீர்ப்பாக இதனை பார்க்கிறார்கள்.
ALSO READ | இந்த டீல் எனக்கு புடுசுருக்கு; கட்டிய மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR