இந்த டீல் எனக்கு புடுசுருக்கு; கட்டிய மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்!

மனைவி வேறு ஆணை விரும்பினார் என்பதற்காக அவரிடம் இருந்து 71 ஆடுகளை வாங்கிவிட்டு மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்!

Last Updated : Aug 25, 2019, 02:55 PM IST
இந்த டீல் எனக்கு புடுசுருக்கு; கட்டிய மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்! title=

மனைவி வேறு ஆணை விரும்பினார் என்பதற்காக அவரிடம் இருந்து 71 ஆடுகளை வாங்கிவிட்டு மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் பாலின் மனைவி சீமா பால். இவர்களுக்குத் திருமணமாகிப் பல வருடங்களாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில், சீமா பாலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த உமேஷ் பால் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 

ஒரு கட்டத்தில் ராஜேஷூடன் வாழப் பிடிக்காத சீமா, உமேஷ் உடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இருவரும் கள்ளத்தனமாகத் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் அந்த ஊரில் பெரிய பிரச்னையாக வெடித்தது. இதையடுத்து ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர். அதில், ராஜேஷ் தன் மனைவி சீமாவை அவரது காதலுடனே செல்ல அனுமதித்துள்ளார். ஆனால், அதற்குப் பதிலாக சீமாவின் காதல் வைத்திருக்கும் ஆட்டுப்பட்டியிலிருந்து 71 ஆடுகளை தனக்கு தரவேண்டும் என கேட்டுள்ளார். 

அதற்குச் சம்மதித்த உமேஷ் 71 ஆடுகளை ராஜேஷிடம் கொடுத்துவிட்டு சீமாவுடன் வாழ துவங்கிவிட்டார். இந்த விவகாரம் தாமதமாகத் தான் ராஜேஷின் தந்தைக்குத் தெரியவந்துள்ளது. அவர் இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் பஞ்சாயத்தைக் கூட்டி சீமா ராஜேஷூடன் தான் வாழ வேண்டும். ராஜேஷ், உமேஷிடம் இருந்து வாங்கிய ஆடுகளைத் திரும்பக் கொடுப்பதாகக் கூறினார். 

ஆனால், சீமா அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை தான் தற்போது உமேஷால் கர்ப்பமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையில் ராஜேஷின் தந்தை உமேஷ் தன் மகன் ராஜேஷின் ஆடுகளைத் திருடிவிட்டதாகப் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது ராஜேஷ் தான் ஆட்டை விருப்பப்பட்டு வழியது தெரியவந்தும் போலீசார் யார் மீது நடவடிக்கை எடுக்காமல் சென்றுவிட்டனர். 

 

Trending News