அடுத்த கல்வி ஆண்டில் JEE தேர்வு 4 முறை நடத்தப்படும்: ரமேஷ் போக்ரியால்!
அடுத்த கல்வி ஆண்டில் சேருவதற்கான ஜே.இ.இ. தேர்வை 4 முறை எழுத வசதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்..
அடுத்த கல்வி ஆண்டில் சேருவதற்கான ஜே.இ.இ. தேர்வை 4 முறை எழுத வசதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்..
வியாழக்கிழமை ஒரு முக்கிய அறிவிப்பில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ (Ramesh Pokhriyal Nishank) கூட்டு நுழைவுத் தேர்வு (JEE - மெயின்ஸ்) 2021 பிப்ரவரி முதல் நான்கு முறை நடைபெறும் என்று அறிவித்துள்ளார். குழு தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் ஆன்லைன் உரையாடலின் போது அவர் இந்த தகவலை தெரிவித்தார். வழக்கமாக JEE-Mains ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும்.
JEE தேர்வு பற்றி மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது, தேர்வுக்கு கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரும் என்று தெரிவித்ததுடன், இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடங்களில் தலா 30 கேள்விகள் என்ற நிலையை தலா 25 கேள்விகள் என்று மாற்றுவதற்கு பரிசீலனை நடந்து வருவதாக கூறினார்.
மேலும், மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் வகையில், அடுத்த கல்வியாண் டில் சேர்வதற்கான JEE தேர்வு பிப்ரவரி மாதத்தில் தொடங்கி, தொடர்ந்து மாதத்துக்கு ஒரு முறை என 4 முறை நடத்தப்படும், மாணவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப எத்தனை முறையும் தேர்வு எழுதலாம் என்று அமைச்சர் கூறினார். எந்த தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அந்த மதிப்பெண்ணே தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ALSO READ | JEE Main 2021: தேர்வு தாமதிக்கப்படுமா? மாணவர்களுக்கான முக்கிய தகவல்கள்
NEET தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரமேஷ் பொக்ரியால், ‘மத்திய சுகாதார அமைச்சகத்துடனும், தேசிய மருத்துவ ஆணையத்துடனும் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று பதில் அளித்தார். இதைப்போல ‘10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியே முடிவு செய்யப்படும்’ என்றும் கூறினார்.
மேலும் ‘செய்முறை தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்’ என்றும் உறுதி அளித்தார். CBSE 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட பகுதிகள் குறித்து பள்ளிகளுக்கு சந்தேகம் இருந்தால் இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR