சுவிட்சர்லாந்தைப் போன்ற அழகான தோற்றம் கொண்டுள்ள கார்கில், யுத்த பூமி அல்ல, புத்தர் பூமி என்கிறார் மத்திய அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்கில் இரவை நேரத்தை கழித்த முதல் மத்திய அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல், தனது இரண்டு நாள் பயணத்தில், படேல் சுற்றுலா தொடர்பான பல திட்டங்களை மதிப்பாய்வு செய்தார்.


370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், ஜம்மு-காஷ்மீர் (Jammu and Kashmir) மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் அதிகரித்துள்ளன. கார்கில், டிராஸ் மற்றும் லே ஆகிய பகுதிகளில், சுற்றுலா மற்றும் விளையாட்டுகளை மேம்படுத்த அரசாங்கம் தொடர்ந்து முயன்று வருகிறது.


இந்த முயற்சியில், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு கார்கிலை சென்றடைந்தார். அப்போது படேல், 'கார்கில் பற்றிய உலகத்தின் கருத்து இப்போது மாற வேண்டும். மைத்ரேயி புத்தர்  பாரம்பரியம். கொண்ட கார்கில் ஒரு யுத்த பூமி அல்ல, புத்தர் பூமியாகும்.  கார்கில் அமைதி மற்றும் சுற்றுலாவுக்கான இடம் என்பதை உலகம் அறிந்து கொள்ள வேண்டும்.


கார்கிலுக்கு இது ஒரு மிக முக்கிய நாள் என்று அவர் கூறினார். அவர் நிகழ்த்திய உரையின் முக்கிய அம்சங்கள்:
 நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐஸ் ஹாக்கி அணிகள் விளையாட்டில் பங்கேற்றன, இதில் கார்கில் மற்றும் லே அணிகளும் பங்கேற்கின்றன. கார்கில் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு அரங்கத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இங்கு வரும் மக்களிடையே மிகுந்த உற்சாகம் நிலவுகிறது. 


ALSO READ | பாகிஸ்தானின் அவல நிலை: நாட்டின் பூங்காவை ₹50000 கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான் கான்..!!


 


370 வது பிரிவு நீக்கப்பட்டதால் இன்று கார்கில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த பகுதிகளின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வருகிறது. கார்கிலின் இளைஞர்கள், நாட்டின் பிற பகுதிகளைப் போலவே, கல்வி விளையாட்டு போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்.


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் (Pakistan) இடையிலான போர் காரணமாக கார்கில்  பகுதியை அனைவரும் அறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கார்கிலின் இந்த சிகரங்களில், பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவியது. அதன் பின்னர் இந்திய இராணுவம் எதிரிகளை விரட்டியது. ஆனால் இது கார்கிலின் ஒரே அடையாளம் அல்ல. கார்கிலின் பகுதிகள் சுவிட்சர்லாந்தைப் போலவே அழகாக இருக்கின்றன மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான புத்த கோவில்கள் உள்ளன, அவை அதன் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. கார்கிலின் முல்பேக் புத்த மடம் சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது. பமயனில் அமைந்துள்ள புத்தர் சிலைக்குப் பிறகு, இது மிக உயரமான புத்தர் சிலையாக கருதப்படுகிறது.


ALSO READ | இனி வாக்காளர் எங்கிருந்தும் வாக்களிக்கலாம், ஒத்திகையை  விரைவில் தொடங்குகிறது ECI


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR