இனி வாக்காளர் எங்கிருந்தும் வாக்களிக்கலாம், ஒத்திகையை விரைவில் தொடங்குகிறது ECI

இன்று  தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து மின்னணு புகைப்பட அடையாள அட்டை (e-EPIC)  வழங்கும் திட்டம் தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 25, 2021, 05:41 PM IST
  • இன்று தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இதையடுத்து மின்னணு புகைப்பட அடையாள அட்டை (e-EPIC) வழங்கும் திட்டம் தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • மேலும் வாக்காளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, எங்கிருந்தும் வாக்கு செலுத்தும் முறை தொடங்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இனி வாக்காளர் எங்கிருந்தும் வாக்களிக்கலாம், ஒத்திகையை  விரைவில் தொடங்குகிறது ECI title=

இன்று  தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து மின்னணு புகைப்பட அடையாள அட்டை (e-EPIC)  வழங்கும் திட்டம் தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது. இனி, ஆதார் அட்டை (Aadhaar Card), பான் அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை மின்னணு வடிவில் பதிவிறக்கம் செய்வதை போல்  வாக்காளர் அடையாள அட்டையையும் வாக்காளர்கள் தங்களது செல்போனில் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில், கூடுதலாக வாக்காளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நாட்டின் எந்த வாக்குசாவடியிலும் ஓட்டு போடக்கூடிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.

வாக்குரிமை உள்ள அனைவரும் தங்கள் வாக்கை தவறமல் செலுத்த  வேண்டும் என்பதே இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) நோக்கமாகும். இதற்காக பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, எங்கிருந்தும் வாக்களிக்கக் கூடிய திட்டதை தேர்தல் ஆணையம் தயாரித்து வருகிறது.

ALSO READ | வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்ப்பது எப்படி...!!

தேர்தல் (Election)நாளில், சொந்த ஊரில் இல்லாமல் வேறு காரணங்களுக்காக, வேறு இடத்திற்கு சென்றவர்கள், மிகவும் வயதானவர்கள், உடல் நல குறைவு உள்ளவர்கள் ஆகியோர், தங்கள் வாக்குரிமையை தவறாமல் செலுத்த இது வழி வகுக்கும். ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கானவர்கள் மேலே கூறப்பட்டுள்ள காரணனத்தினால் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியவில்லை.

இதனை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்கான ஒத்திகை விரைவில் தொடங்கப்படும் என தேசிய வாக்காளட்ர் தினமான் இன்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஒத்திகைக்கு பின்னர், பரிசோதனை அடிப்படையில் இதனை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை ஐ.ஐ.டி. (IIT)உள்ளிட்ட மற்ற கல்வி நிறுவனங்களிலும், தேர்தல் ஆணையத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | இனி ஆதார் அட்டை போன்று வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செயலாம்!!
 

Trending News