கர்நாடக முதலமைச்சர் பி.எஸ், எடியூரப்பா, கோவிட் -19 தொற்றிலிருந்து பூரண குணமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு, வீடு திரும்பினார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

77 வயதான திரு.யடியூரப்பாவிற்கு, கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இப்போது பூரண குணமடைந்தார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.


முதல்வரே ட்வீட் செய்து இந்த தகவலை கூறினார். "உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும்  நன்றி. நான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இப்போது செல்ப் குவாரண்டைனில் இருப்பேன். உங்கள் பாசத்திற்கும் ஆதரவிற்கும் மிகுந்த நன்றி. மிக விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவேன் என எதிர்பார்க்கிறேன்," என்று அவர் கூறினார்.



ALSO READ | பொய் சொல்லி மாட்டிக் கொண்டாரா கனிமொழி... சூடு பிடிக்கும் அரசியல் களம்...!!!


மாநில தகவல் துறை வெளியிட்டுள்ள படங்களில் மருத்துவர்கள் குழு ஒரு பூச்செண்டு கொடுத்து முதலமைச்சரை வாழ்த்துவதை காணலாம். எடியூரப்பா, தாம் எப்போதும் அணியும் வெள்ளை நிற ஆடையை அணிந்து, மாஸ்க் அணிந்து காணப்பட்டார். மருத்துவமனையிலிருந்து வெளியே நடந்து செல்லும் மற்றொரு படத்தில், ஊழியர்களுக்கு கை கூப்பு நன்றி தெரிவிப்பதை காண முடிந்தது.


முதலமைச்சர்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும், ​​கோப்புகளில் கையெழுத்திடுவது மற்றும் மறுஆய்வுக் கூட்டங்களை நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆகஸ்ட் 2 ம் தேதி, எடியூரப்பாவிற்கு கோவிட்-19 தொற்று உறுதியான பிறகு, உடல நிலை நன்றாக இருந்தபோதிலும் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ட்வீட் செய்திருந்தார்.


ALSO READ | கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து.. தீயை அணைக்க தீவிர முயற்சி..!!


மூத்த பாஜக தலைவரான இவர், தனது அலுவலகத்தில் இருந்த சில ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் வீட்டில் குவாரண்டைனில் இருந்தார்.