Karnataka Election 2023: கர்நாடகாவில் பாஜக வெற்றி பெறும்! அமித் ஷா சொல்வதை மறுக்கும் கால பைரவர்
Election campaign For Karnataka: சூடு பிடிக்கும் கர்நாடக சட்டசபை தேர்தல் யாருக்கு சிம்மாசனம்? காலபைரவரின் கணக்கு உண்மையாகுமா? அமித் ஷாவின் நினைப்பு நிறைவேறுமா?
பெங்களூரு: கர்நாடக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை குறைத்து மதிப்பிடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவே ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி யாருக்கு என்ற போட்டாப்போட்டி நிலவி வருகிறது.
கர்நாடகா சட்டசபைக்கான 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10ம் தேதியன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளிடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 128 முதல் 131 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என லோக்பால் சர்வே சில தினங்களுக்கு முன்பே தனது ஆய்வை வெளிப்படுத்தியது. ஆனால், அதை பாஜகவின் மூத்தத் தலைவர் அமித் ஷா மறுக்கிறார்.
காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்திய தேர்தல் கருத்துக் கணிப்பை புறந்தள்ளும் அமித் ஷா, தேர்தலுக்குப் பிறகு பாஜகதான் வெற்றி பெறும் என்று அமித் ஷா செவ்வாய்க்கிழமை (2023 ஏப்ரல் 25) தெரிவித்தார்.
மேலும் படிக்க | டிஜிட்டல் ஈஸ்ட் இண்டியா கம்பெனி! கூகுளின் பில்லிங் கொள்கையை சாடும் அனுபம் மிட்டல்
காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், கடுமையான போட்டி இருக்கும் என்றும் பல கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் முடிவுகள் வெளியான பிறகு பாஜக வெற்றி பெறும், என்று அமித் ஷா கூறினார்.
தேர்தல் நடைபெறும் கர்நாடக மாநிலத்தில் யாத்கிர், பாகல்கோட் மற்றும் விஜயபுரா மாவட்டங்களில் சாலைக் காட்சிகள் மற்றும் பேரணிகளை நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிலவரம் யாருக்கு சாதகம் என்பது தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தெரியும் என்று அமித் ஷா தெரிவித்தார்.
பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்த அமித் ஷா, பாஜகவில் டிக்கெட் கிடைக்காததால், கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மண் சவடி ஆகியோர் தோற்கடிக்கப்படுவார்கள் என்று அவர் கணிப்பு வெளியிட்டார்..
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் முடிந்து, இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தீவிர வாக்குப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்களித்து தலைவர்களை தேர்ந்தெடுப்பதுதான் மிஞ்சியிருக்கும் நிலையில், மக்களிடையே எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகளுக்கு மத்தியில், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்று கால பைரவர் சூசகமாக அறிவித்துள்ளார். ஆம், மண்டியாவில் உள்ள அசோகநகரில், நாய் கால பைரவராக வணங்கப்படுகிறது.
அங்கு நடைபெற்ற பூஜையின் போது, கர்நாடகா தேர்தலில் முக்கிய வேட்பாளர்களான பசவராஜ பொம்மை, எச்.டி.குமாரசாமி, டி.கே.சிவக்குமார் ஆகியோரின் புகைப்படங்கள் கால பைரவராக வணங்கப்படும் நாயின் முன் வைக்கப்பட்டது. அப்போது மூன்று தலைவர்களில் ஹெச்.டி.குமாரசாமியின் புகைப்படத்தை நாய் தேர்வு செய்து தனது கணிப்பை வெளிப்படுத்தியது.
கால பைரவரின் கணிப்பு உண்மையாகுமா? கருத்துக் கணிப்புகள் மெய்யாகுமா இல்லை அமித் ஷாவின் சூசகமான தேர்தல் பிரச்சாரம் உண்மையாகுமா? வினாக்களுக்கான விடைகள் இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
மேலும் படிக்க | கேரளாவில் உள்ள கிறிஸ்தவ மத தலைவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ