கர்நாடகா தேர்தல் 2023: மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. காங்கிரஸும் ஆட்சியை பிடிக்க மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது . தென்னிந்தியாவில் பாஜகவின் கோட்டையாக கர்நாடகா மட்டுமே உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பாஜக எந்த நிலையிலும் அதை இழக்க விரும்பவில்லை. கர்நாடகாவில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து கருத்து கணைப்பு என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் மே 10ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் பதிவாகி மே 13ஆம் தேதி முடிவுகள் வெளியாகும். அதற்கு முன், ZEE NEWS க்காக MATRIZE ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பு மார்ச் 29 முதல் ஏப்ரல் 30 வரை நடத்தப்பட்டது. இந்தக் கருத்துக் கணிப்பில் கர்நாடக சட்டப்பேரவையின் 224 இடங்களில், சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேரிடம் கருத்துக்கள் எடுக்கப்பட்டுள்ளன.  கர்நாடகா தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் பிழையின் விளிம்பு மைனஸ் 5 சதவிகிதம். இவையெல்லாம் தேர்தல் முடிவுகள் அல்ல, வெறும் கருத்துக் கணிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கருத்துக் கணிப்பு, தேர்தலில் எந்த வகையிலும் செல்வாக்குச் செலுத்தும் முயற்சியாகப் புரிந்து கொள்ளக் கூடாது. கர்நாடகாவில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். இது தவிர, கர்நாடகாவின் 6 பிராந்தியங்களில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | இலவச காஸ் சிலிண்டர்... தினமும் அரை லிட்டர் நந்தினி பால்... பாஜக தேர்தல் அறிக்கை!


Zee News Matrize இன் கருத்துக்கணிப்பின்படி பாஜக 103-115 இடங்களைப் பெறலாம். மறுபுறம், காங்கிரஸ் 79-91 இடங்களில் வெற்றி அடையக் கூடும். அதேசமயம் ஜனதா தளம் கிங்மேக்கராக செயல்பட கூடும். மதசார்ப்பற்ற ஜனதா தளம் 26-36 இடங்களைப் பெறலாம். மற்றவர்கள் 1-3 இடங்களைப் பெறலாம்.


எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்?
மொத்த இடங்கள் - 224


பாஜக - 103-115
காங்- 79-91
ஜேடிஎஸ் - 26-36
பிற கட்சிகள் - 1-3


முன்னதாக, கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி திங்கள் கிழமை வெளியிட்டது. இதற்கு 'விஷன் டாகுமென்ட்' என அக்கட்சி பெயரிட்டுள்ளது. கட்சியின் தலைவர் ஜேபி நட்டா தலைநகர் பெங்களூருவில் இதனை வெளியிட்டார். அதில் மாநில மக்களுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு விநாயக சதுர்த்தி, உகாதி மற்றும் தீபாவளியின் போது இந்த பரிசு மக்களுக்கு வழங்கப்படும். 


மேலும் படிக்க | Rahul Gandhi: பாஜகவுக்கு 40 எம்.எல்.ஏக்கள் கிடைக்கும்! ராகுலின் கர்நாடக தேர்தல் கணிப்பு


மேலும் படிக்க | கேரளாவில் உள்ள கிறிஸ்தவ மத தலைவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ