Karnataka Election: கர்நாடக மாநிலத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்?

Karnataka Assembly Election 2023: சந்தனம் மணக்கும் கர்நாடக மண்ணை ஆளப்போவது யார் என்ற போட்டி உச்சக்கட்டத்தை அடைகிறது. வேட்பு மனுத்தாக்கல், பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் என அனல் பறக்கிறது அண்டை மாநில தேர்தல் களம்

பாரத் ஜோடோ என்று காங்கிரஸ் முன்னெடுத்தால், அதற்கு மாற்றி யோசித்து வேறு வழியாக யூகத்தை அமைக்கிறது பாஜக என்றால், பிற கட்சிகளும் களத்தில் கச்சைக் கட்டிக் கொண்டு நிற்கின்றன. ஒரு தொகுதியில் கணவன் மனைவி இருவரும் போட்டி என தேர்தல் களம் களை கட்டிவிட்டது...

மேலும் படிக்க: கர்நாடக சட்டசபை தேர்தல் 2023: நட்சத்திர பிரச்சாரகர் பட்டியலில் முக்கிய பெயர்கள் மிஸ்ஸிங்!

1 /8

எச்.டி. குமாரசாமி ஒரு திமிர் பிடித்தவர் என மாண்டியா எம்.பி சுமலதா சாடினார்

2 /8

லிங்காயத் சமுதாயத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாகவும், 50 ஆண்டுகளாக காங்கிரஸ் லிங்காயத் கட்சியை சேர்ந்தவர்களை முதல்வராக்கவில்லை. காங்கிரஸில் நிஜலிங்கப்பாவைத் தவிர லிங்காயத் முதல்வர்கள் யாரும் இல்ல என்று முதல்வர் பசவராஜ பொம்மை காங்கிரஸ் கட்சியை சாடினார்.

3 /8

ஆட்சிக்கட்டில் யாருக்கு என்ற போட்டியில் யாரும் பின்வாங்கத் தயாராயில்லை. அனைத்துக் கட்சியினரும் மும்முரமாக முயற்சிக்கின்றனர்

4 /8

வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக சிக்காவி நகரில் நடந்த பிரமாண்ட சாலைப் பேரணியில்  முதல்வர் பசவராஜ் பொம்மைக்காக நடிகர் சுதீப் பிரச்சாரம் செய்தார்.

5 /8

கணவன், மனைவி இருவரும் ஒரே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தொகுதியில் கணவர் மல்லிகார்ஜுன் நெக்கண்டிஊ அவரது மனைவி என்.ரம்யா ஆகியோர் ஒருவரையெதிர்த்து மற்றொருவர் போட்டியிடுகின்றனர்

6 /8

மைசூரு மாவட்டத்தில் காங்கிரஸை வெற்றிபெறச் செய்யும் கணக்குகளை முன்னெடுத்துள்ள சித்தராமையா, வொக்கலிக சமுதாயம் மற்றும் முஸ்லிம் தலைவர்களை சந்தித்து வியூகம் அமைக்கிறார்

7 /8

கர்நாடக தேர்தல் - புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் வேட்புமனு தாக்கல்

8 /8

பாரத் ஜோடோ என்று சொல்லி தேர்தல் முழக்கம் எழுப்புகிறார் காங்கிரஸின் உச்சத் தலைவர் ராகுல் காந்தி