பெங்களூரில் லஸ்கர்-இ-தைபா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 4 பேர் கைது
கர்நாடகா மாநில போலீசார் பெங்களூரு திலக் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் சோதனை மேற்கொண்டு, அறையில் தங்கி இருந்த தீவிரவாதிகள் நாலு பேரை கைது செய்ததாக கூறப்படுகிறது.
கர்நாடகா மாநில தலைநகரமான பெங்களூரில் லஸ்கர் இ தைபா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த நான்கு தீவிரவாதிகளை பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அஸ்ஸாம் மாநிலத்தில் லஸ்கர் இ தைபா இயக்கத்தை சேர்ந்த அக்தர் மற்றும் கூட்டாளிகள் மூன்று பேர் (அக்தர் உசேன்,மொகமது தக்வீர், இர்பான் நசீர், தலிப்) அசாம் மாநிலத்தில் இருந்து தலைமறைவாகி பெங்களூரில் தஞ்ச மடைந்ததாக சொல்லப்படுகிறது. பெங்களூர் திலக் நகரிலுள்ள ஒரு அடக்குமாடி கட்டிடத்தில் அரையில் தங்கிய தீவிரவாதிகள் உணவு டெலிவரி செய்யும் பணி செய்து வந்தனர்.
இந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் தலைமறைவான நான்கு தீவிரவாதிகள் பெங்களூரில் தஞ்சம் அடைந்ததாக அஸ்ஸாம் மாநில குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்த நிலையில் அஸ்ஸாம் போலீசார் பெங்களூரு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த ரகசிய தகவலின் பெயரில் பெங்களூருவில் இருந்த 4 தீவிரவாதிகளை தேடி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பெங்களூரு திலக் நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் அறை எடுத்து 4 பேர் தங்கியுள்ளதை போலீசார் உறுதி செய்தனர். கடந்த ஒரு வாரமாக இவரை கண்காணித்து வந்த குற்றப்பிரிவு போலீசார், நேற்று இரவு 30க்கும் மேற்பட்ட போலீசார் திலக் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் சோதனை மேற்கொண்டு, அறையில் தங்கிய அத்தர் உட்பட நாலு பேரை கைது செய்ததாக கூறப்படுகிறது.
தீவிரவாதிகளை கைது செய்த பெங்களூர் குற்றப்பிரிவு போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக பெங்களூரில் தஞ்சமடைந்த தீவிரவாதிகள் தங்கியிருந்த அறையில் பல பொருட்களை கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெங்களூர் நகர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: நம்பி வந்த இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்: தஞ்சை அருகே கொடூரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ