ரூ.1 லட்சம் கல்விக் கடன் திருப்பி செலுத்தாததால், 2 சகோதரிகளின் ஆடை அவிழ்ப்பு!

Bengaluru Crime News: கல்விக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால், 2 சகோதரிகளின் ஆடை அவிழ்க்கப்பட்டு தாக்கிய சம்பவம். இருவர் கைது. ஒருவர் தலைமறைவு.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 29, 2022, 08:58 PM IST
  • இரண்டு சகோதரிகளின் ஆடைகளை அவிழ்த்து பாலியல் தொல்லை.
  • இருவரை போலீஸார் கைது செய்தனர். ஒருவர் தலைமைறைவு.
  • இரண்டு நாட்களாக எந்த புகாரும் போலீசார் பதிவு செய்யவில்லை.
ரூ.1 லட்சம் கல்விக் கடன் திருப்பி செலுத்தாததால், 2 சகோதரிகளின் ஆடை அவிழ்ப்பு! title=

பெங்களூரு: (ஐஏஎன்எஸ்) பெங்களூருவின் புறநகரில் உள்ள சர்ஜாபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொட்டபொம்மசந்ரா பகுதியில் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்வி செலவிற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த காலதாமதமானதால், வீட்டில் இருந்த இரண்டு சகோதரிகளின் ஆடைகளை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யாமல், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு நாட்களாக எந்த புகாரும் போலீசார் பதிவு செய்யவில்லை. பொதுமக்கள் ஆத்திரமடைந்து போராட்டம் நடத்திய பிறகுதான் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து போலீசார் புகார் பதிவு செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் சுனில் குமார் ஆகிய இருவரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் சுனில் குமார், இந்திரம்மா ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது. மூன்றாவது குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.

பாலியல் தொல்லைக்கு ஆளான சகோதரிகளின் தந்தை, தொட்டபொம்மசந்திரா அருகே உள்ள நெரிகா கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டி என்பவரிடம் தனது குழந்தைகளின் கல்விக்காக 30 சதவீத வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ராமகிருஷ்ணா ரெட்டியும் கடன் கொடுத்துள்ளார். இந்நிலையில், கடனைக் கொடுத்த ராமகிருஷ்ணா ரெட்டி, சுனில் குமார் மற்றும் இந்திரம்மா ஆகியோரை உடன் அழைத்துக்கொண்டு பணத்தை திரும்ப கேட்க வந்துள்ளார்.

மேலும் படிக்க: கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்

வீட்டில் தனியாக இருந்த இரண்டு சகோதரிகளிடம் உடனடியாக முழு கடன் தொகையையும் ஒரே நேரத்தில் திருப்பிச் செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளார்கள். தங்கள் நிலத்தை விற்று கடனைத் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளனர். ஆனால் அந்த மூன்று பேரும் வீட்டிற்குள் நுழைந்து இரண்டு சகோதரிகளைத் தாக்கி, ஆடைகளை அவிழ்த்து அத்துமீறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் சர்ஜாபூர் காவல் நிலையத்தை அணுகியுள்ளனர். ஆனால், இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா இம்ப்ராபூர் புகார் வாங்க மறுத்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் குற்றவாளிகளுடன் சமரசம் செய்துக்கொள்ளும்படி இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில்,  இரண்டு சகோதரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, காவல்துறை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இறுதியாக, பாதிக்கப்பட்டவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்த, போலீசார் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் படிக்க: சினிமா பாணியில் ஸ்கெட்ச் செய்து கொலை! பழிக்கு பழி வாங்கிய தம்பி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News