ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் என்ன? கவாச் சிஸ்டம் Not Available...! - அரசுக்கு வலுக்கும் கண்டனம்!
Coromandel Express Accident: Kavaach என்பது ரயில்களில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பக் கருவி. விபத்து நடைபெற்ற ரயில்களின் இன்ஜின்களில் kavach தொழில்நுட்பம் இல்லாததே விபத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.
Coromandel Express Accident: ஒடிசாவின் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இது தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட விபத்தா அல்லது மனித தவறால் ஏற்பட்ட விபத்தா என இந்த விபத்தை சுற்றி பல கேள்விகள் இருந்து வருகிறது.
ஒடிசாவின் பாலச்சோரில் வெள்ளிக்கிழமை மாலை 6:50 மணி முதல் இரவு 7.10 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதி கொண்ட கோர விபத்து நெஞ்சை உலுக்கி உள்ளது. இதில் முதலாவதாக தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உள்ளது. இதில் ரயில் மோதிய வேகத்தில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு எதிரே உள்ள தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இந்த தகவல் ஹவுராவிலிருந்து பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்த யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சொல்லப்படவில்லை. இதனால் அந்த ரயிலும் வந்த வேகத்தில் ஏற்கனவே தடம் புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.
மூன்று ரயில்களும் மோதி கொண்டதில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக 250க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதைத் தவிர 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ் இரண்டிலும் சேர்த்து பயணித்தோரின் எண்ணிக்கை 2500 என சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் ஒட்டுமொத்தமாக 17 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு பலர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்தை சுற்றி எழுப்பப்படும் கேள்விகள்...
விபத்தை சுற்றி எழுப்பப்படும் முக்கியமான கேள்விகளில் ஒன்று ஏற்கனவே சரக்கு ரயில் நின்று கொண்டிருக்கும் ஒரு தண்டவாளத்தில் எப்படி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வர அனுமதி வழங்கப்பட்டது என்பதுதான். இது உண்மையிலேயே தொழில்நுட்பக் கோளாறா அல்லது மனித பிழையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிக்னல் கோளாறு
இந்த விபத்து ஏற்பட்டதற்கு சிக்னல் கோளாறு தான் காரணம் என நான்கு பேர் கொண்ட விசாரணை குழு முதற்கட்ட தகவலில் கூறி உள்ளது. சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸிற்கு முதலில் பச்சை சிக்கனல் காட்டப்பட்டதாகவும் பின்பு உடனடியாக பச்சை சிக்கனல் ரத்து செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மெயின் தண்டவாளத்தில் செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் தண்டவாளத்திற்கு மாறி உள்ளது. இதனால் ஏற்கனவே லூப் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீதும் மோதி உள்ளது. பின்னர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு மெயின் தண்டவாளத்தில் விழுந்ததால் அந்த வழியாக அடுத்து வந்த பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மீது மோதி உள்ளது.
கவாச் கருவி தான் காரணமா?
இந்த விபத்தை அடுத்து தற்போது பலரும் கவாச் சிஸ்டம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். Kavaach என்பது ரயில்களில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பக் கருவி. அதனை National automatic train protection என்று கூறுகின்றனர். இதை ரயில்களில் பொருத்துவதன் மூலம் சிக்னல், வேகம் ஆகியவற்றை கண்காணிப்பதோடு ரயில்கள் மோதி கொள்வதை தடுப்பதற்கும் ,ஆபத்துக் காலங்களில் தன்னிச்சையாக செயல்பட்டு விபத்துகளை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
மேலும் படிக்க | Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் பலி, 900 பேர் காயம்!
இந்த சூழ்நிலையில் இந்த விபத்து பற்றி பேசியுள்ள ரயில்வே துறையின் செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா ஒடிசாவில் விபத்து நடந்த வழித்தடத்தில் kavach not available என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து ரயில் விபத்து பற்றி கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகீட் கோகலே, ரயில் இன்ஜின்களில் kavach தொழில்நுட்பம் இல்லாததே விபத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து இது பற்றி பதிவிட்டுள்ள அவர், இந்தியாவைப் பொறுத்தவரை மொத்த ரயில் பாதை என்பது 68,043 km அதில் kavach நிறுவப்பட்ட வழித்தடம் என்பது வெறும் 1445 km மட்டுமே. அதாவது மொத்த வழித்தடத்தில் வெறும் 2 சதவீதம் மட்டுமே kavach பொருத்தப்பட்ட வழித்தடம் என்று கூறியுள்ளார். மேலும் ரயில்வே துறை அமைச்சராக இருக்கும் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது இந்த ரயில் விபத்து உலகம் முழுவதுமே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இனியாவது இதுபோன்ற மற்றொரு கோர விபத்து ஏற்படும் முன்பு அதனை தடுக்க கவாச் சிஸ்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ