பாலியல் புகார் வழக்கில் சிக்கியுள்ள பிரபல நடிகர் சித்திக் முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளார். கேரளா உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் மறுத்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் செல்ல உள்ளனர். இந்நிலையில், சித்திக் மீது பாலியல் புகார் அளித்த அதி ஜிவேதாவும் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யவுள்ளார். சித்திக் தரப்பில் இருந்து ஜாமீன் மனு தாக்கல் செய்தால், தன்னை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளார் அதிஜீவிதா. கேரளாவில் உள்ள சித்திக் தரப்பு வழக்கறிஞர்கள் டெல்லியை சேர்ந்த சில மூத்த வழக்கறிஞர்களை முன் ஜாமின் தாக்கல் செய்வது தொடர்பாக பேசியுள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சித்திக்கிற்கு விமான நிலையங்களில் லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியா? பாஜக ஆடும் ஆட்டம்.. முடிந்தால் செய் என ஆம் ஆத்மி சவால்


திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து இளம் நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கி உள்ளார் பிரபல மலையாள நடிகர் சித்திக். அவரை தற்போது போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். விமான நிலையங்களில் அவரைக் கண்காணிக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் மறுக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதை போலீஸார் உறுதி செய்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்திக் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​சித்திக் பயன்படுத்தும் அனைத்து மொபைல் எண்களும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது. சித்திக்கை அவரது கொச்சி ஓட்டல்கள், நண்பர்களின் வீடுகளில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



கேரளா உயர்நீதிமன்றம் ஜாமின் நிராகரிப்பு


உயர்நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.டயஸ் சித்திக்கின் ஜாமின் மனுவை நிராகரித்தார். சித்திக் தரப்பில் இருந்து, அவர் எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆனால் அரசு தரப்பில் இருந்து இந்த வழக்கை விரைவாக விசாரிக்க ஜாமின் வழங்க கூடாது என்று வாதிட்டது. மேலும் வழக்கின் முன்னேற்றத்திற்காக அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, விசாரணைக்கு முன் சித்திக்கை விடுவிக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. 


யார் இந்த அதி ஜிவேதா?


சினிமாவில் நடித்து வரும் அதி ஜிவேதா, சித்திக் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும், அவரது பெண் நண்பர்கள் பலருக்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். "பட வாய்ப்பு விஷயமாக சித்திக்கிடம் அடிக்கடி பேசி கொண்டு இருந்தேன். ஒரு படத்தின் முன்னோட்டம் முடிந்த பிறகு, அதைப் பற்றி பேச மஸ்கட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு என்னை அழைத்தார். நான் அங்கு சென்ற போது ஒரு அறையில் வைத்து சித்திக் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்" என்று நடிகை அதி ஜிவேதா கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் இதைப் பற்றி அனைவரிடமும் கூறியதாகவும், இப்போது தான் திரைப்படத்தில் நடிப்பது இல்லை என்பதால் இதனை பற்றி பயமின்றி பகிர்ந்து கொள்ள முடிகிறது என்றும் நடிகை தெளிவுபடுத்தியிருந்தார்.


இளம் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சித்திக் மீது திருவனந்தபுரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த குற்றச்சாட்டின் காரணமாக, சித்திக் 'அம்மா' என்ற அமைப்பில் இருந்தும் விலகி உள்ளார். இது மாதிரியான குற்றத்தில் யாரேனும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக சிறைக்கு செல்லலாம், மேலும் அவர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று சட்டங்கள் கூறுகின்றன. 


சித்திக் தரப்பு வாதம்


சித்திக் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர் பி.ராமன் பிள்ளை, இது எல்லாம் நீண்ட காலத்திற்கு முன்பு 2012ல் நடந்ததாகவும், புகார் கொடுத்தவர் ஒரு கதையை உருவாக்கினார் என்று கூறினார். ஆனால், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.நாராயணன், சித்திக் பல உண்மையை மறைத்து வருவதாகவும், சித்திக் மற்றும் அந்த பெண் இருவரும் மஸ்கட்டில் உள்ள ஹோட்டலுக்கு ஒன்றாகச் சென்றதற்கான ஆதாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே சித்திக் கைது செய்யப்பட்டு, விரைவில் சிறையில் அடிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | பிரபல பாலிவுட் நடிகர் விகாஸ் சேத்தி 48 வயதில் திடீர் மரணம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ