பிரபல பாலிவுட் நடிகர் விகாஸ் சேத்தி 48 வயதில் திடீர் மரணம்!

Vikas Sethi: 2000 ஆண்டு காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி நட்சத்திரம் விகாஸ் சேத்தி அவரது 48 வயதில் மரணம் அடைந்துள்ளார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Sep 9, 2024, 01:16 PM IST
  • நடிகர் விகாஸ் சேத்தி மாரடைப்பில் மரணம்.
  • 48 வயதில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
  • ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகர் விகாஸ் சேத்தி 48 வயதில் திடீர் மரணம்! title=

Vikas Sethi: 2000 காலகட்டத்தில் கியுங்கி சாஸ் பி கபி பஹு தி, கஹியின் தோ ஹோகா மற்றும் கசௌதி ஜிந்தகி கே போன்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பெயர் பெற்ற பாலிவுட் நடிகர் விகாஸ் சேத்தி செப்டம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது 48வது வயதில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இந்த திடீர் மரணம் குறித்து குடும்பத்தினர் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அன்னையர் தினத்தன்று அவரது தாயாருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு இதயப்பூர்வமான வாழ்த்தை பகிந்துள்ளார். நடிகர் விகாஸ் சேத்தி தனது தாயுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, அவர் மீதான தனது அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தினார். 

மேலும் படிக்க | பேச்சுலர், ராட்சசன் படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்!

பார்க்கும் போதே பலரது இதயங்களை வெல்லும் இந்த படங்களை, பகிர்ந்து "அன்னையர் தின வாழ்த்துக்கள், அம்மாவை நேசிக்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் விகாஸ் சேத்தியின் இறப்பு செய்தியை கேட்டு பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். “RIP விகாஸ். நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தையிலும் உங்கள் அம்மா மீதான உங்கள் அன்பு வெளிப்பட்டது. உங்களை அனைவரும் மிஸ் பண்ணுவோம்" என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டு உள்ளார். மற்றொரு ரசிகர், “நீங்கள் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. உங்கள் புன்னகையும் நடிப்பு ஆற்றலும் எப்போதும்  எங்கள் நினைவில் இருக்கும். இந்த கடினமான நேரத்தில் உங்கள் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikas Sethi (@vikass.sethi)

விகாஸ் சேத்தி 2000 காலகட்டத்தில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய வேடங்களில் நடித்த நன்கு அறியப்பட்ட நடிகராக இருந்தார். தொலைக்காட்சி,  பாலிவுட் படங்களிலும் நடித்து இருந்தார் விகாஸ். "கபி குஷி கபி கம்" என்ற புகழ்பெற்ற திரைப்படத்தில் கரீனா கபூரின் நண்பராக நடித்து இருந்தார். மேலும் அர்ஜுன் ராம்பால் மற்றும் தியா மிர்சா போன்ற நட்சத்திரங்களுடன் "தீவனப்பன்" என்ற படத்தில் நடித்தார். பின்னர் 2019ம் ஆண்டு "இஸ்மார்ட் ஷங்கர்" என்ற தெலுங்கு திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். 2007ல், "நச் பலியே" என்ற நடன ரியாலிட்டி ஷோவில் அவரது மனைவி அமிதாவுடன் பங்கேற்றார். நடிகர் விகாஸ் சேத்தியின் திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க | பாலிவுட் படங்களின் நடிக்க விருப்பம் இல்லை: நடிகர் டொவினோ தாமஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News