கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு உணவகம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜிப் அம்சத்துடன் கூடிய தனித்துவமான முகக்கவசங்களை (Mask) வழங்குவதற்கான ஒரு புதுமையான நடவடிக்கையை எடுத்துள்ளதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரும்பாலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது முகக்கவசத்தை அணிய மறந்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு பல இடங்களில் நுழைவு மறுக்கப்படுகின்றது. பல இடங்களில் அவர்களை அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் இந்த உணவகம் இந்த தனித்துவமான செயல்முறையைப் பற்றி சிந்தித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொது இடங்களில் முகக்கவசம் அணிவது ஒரு தினசரி பழக்கமாக வேண்டும் என்பதே கொல்கத்தாவின் (Kolkata) இந்த உணவகத்தின் குறிக்கோள்.



முகக்கவசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளதால், அவை ஒரு ஜிப் (Zip) அம்சத்துடன் வந்தால், அவற்றை அகற்ற வேண்டிய அவசியமே ஏற்படாது என உணவக உரிமையாளர் சோமோஷ்ரீ சென்குப்தா கூறினார்.


ALSO READ: கையில் குழந்தை, மனதில் உறுதி: புலம் பெயர்ந்த பெண் தொழிலாளிதான் Corona காலத்து துர்கை அம்மன்


"முகக்கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஆகையால் நீங்கள் இங்கே உணவை உண்ணும்போது, ​​ஜிப் அவுட் செய்து சாப்பிடுங்கள், நீங்கள் சாப்பிட்டு முடித்ததும், ஜிப் இன் செய்யுங்கள்" என்று சென்குப்தா கூறியதாக ANI தெரிவித்தது.


இந்த தனிச்சிறப்பு வாய்ந்த முகக்கவசங்களை சாப்பிடும்போது கழற்றாமல் போட்டுக்கொண்டே இருக்கலாம்.


"நாங்கள் கூடுதல் கட்டணம் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாஸ்குகளை வழங்குகிறோம். இருப்பினும், இது கட்டாயமில்லை. அவர்கள் விரும்பினால் அவர்கள் அதை அணியலாம்," என்று அவர் கூறினார்.


COVID-19 நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க முகக்கவசங்கள் அணிவதை ‘புதிய இயல்பு’ அதாவது ‘New Normal’ ஆக்குவதை நோக்கிய ஒரு சிறிய படியாகும் இது.


கொரோனா காலம் மனிதனுக்குள் இருக்கும் படைப்பாற்றலையும், அறிவாற்றலையும் வெகுவாக வெளிக்கொண்டு வந்துள்ளது. பல புதிய கண்டுபிடிப்புகள், புதிய முயற்சிகளை நாம் கடந்த சில மாதங்களில் பார்த்துள்ளோம். அந்த பட்டியலில் இந்த ‘Zip Mask’-கும் கண்டிப்பாக ஒரு தனி இடத்தைப் பிடிக்கும்.


ALSO READ: அட நம்புங்க…. இந்த 1 Rupee Coin இருந்தா நீங்க லட்சாதிபதி ஆகலாம்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR