புதுடெல்லி:  நீதித்துறை உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தின் அடிப்படையிலான உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பான முக்கிய முடிவு இன்று வெளியானது. ஆம் ஆத்மி கட்சியின் 'ஆக்கிரமிப்பு' ஜூன் 15 ஆம் தேதிக்குள் அகற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியின் ரூஸ் அவென்யூவில் உள்ள கட்சி தலைமையகத்தை காலி செய்யுமாறு ஆம் ஆத்மிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாவட்ட நீதிமன்றத்தை விரிவுபடுத்துவற்காக டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு நிலத்தை வழங்க ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் கூறினார். ஆம் ஆத்மி கட்சி அத்துமீறல் செய்துள்ளதாக கூறிய உச்ச நீதிமன்றம், டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூவில் உள்ள இடத்தை காலி செய்யுமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு (Aam Aadmi Party (AAP)) உத்தரவிட்டுள்ளது.


"வரவிருக்கும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, வளாகத்தை காலி செய்ய ஜூன் 15, 2024 வரை கால அவகாசம் வழங்குகிறோம், மாவட்ட நீதித்துறை கட்டமைப்பை விரிவுபடுத்த ஒதுக்கப்பட்ட நிலம் விரைவாக காலி செய்யப்பட வேண்டும் " என்று நீதிமன்றம் கூறியது. இதனால், தேர்தலுக்கு முன்னரே இடத்தை காலி செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சிக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. 


இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான சட்ட அமர்வில் நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திடம் இருந்து தனது அலுவலகங்களுக்கான நில ஒதுக்கீட்டைப் பெறுமாறு ஆம் ஆத்மிக்கு உத்தரவிட்டது.


மேலும் படிக்க | அரசியலுக்கு முழுக்கு போட்ட பாஜக எம்பி டாக்டர் ஹர்ஷ்வர்தன்... காரணம் என்ன!


தொடர்புடைய வளாகத்தில் ஆம் ஆத்மி கட்சி இருப்பதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்பதை வலியுறுத்திய கோரிக்கையை பரிசீலித்த சட்ட அமர்வு, இந்த விவகாரத்தில் நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு எல்&டிஓவிற்கு (Land and Development Office (L&DO)) அறிவுறுத்தல்களை வழங்கியது.


டெல்லி அரசின் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இந்தியாவில் உள்ள ஆறு தேசியக் கட்சிகளில் ஒன்றாக ஆம் ஆத்மி இருப்பதை நீதிமன்ற அமர்விடம் சுட்டிக்காட்டினார். தற்போது ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய அரசு வழக்கறிஞர் சிங்வி, இதை மற்றவர்களின் இடங்களுடன் ஒப்பிட்டு வாதங்களை முன்வைத்தார். 


எதிர்வரவிருக்கும் பொதுத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, ஆம் ஆத்மி கட்சிக்கு, ஜூன் 15, 2024 வரை கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியது. இந்த நீட்டிப்பு, மாவட்ட நீதித்துறையின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது.


முன்னதாக, ரூஸ் அவென்யூவில் உயர் நீதிமன்றத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஆம் ஆத்மி கட்சி செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைக்குமாறு டெல்லி அரசுக்கும், டெல்லி உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரலுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | India Alliance: கெஜ்ரிவால், அகிலேஷ்க்கு பிறகு, மம்தாவுடன் பேசும் காங்கிரஸ், கழுகு பார்வையில் பாஜக!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ