India Alliance: கெஜ்ரிவால், அகிலேஷ்க்கு பிறகு, மம்தாவுடன் பேசும் காங்கிரஸ், கழுகு பார்வையில் பாஜக!

India Alliance, TMC vs Congress: மேற்கு வங்கம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் டிஎம்சி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அது சாதகமான திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 23, 2024, 12:42 PM IST
India Alliance: கெஜ்ரிவால், அகிலேஷ்க்கு பிறகு, மம்தாவுடன் பேசும் காங்கிரஸ், கழுகு பார்வையில் பாஜக! title=

Lok Sabha Elections 2024: லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணி உடன்பாடு மற்றும் தேர்தல் வியூகம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்கள் கிடைக்கும், அதில் பாஜக 370 இடங்களை கைபற்றும் என பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்து உள்ளார். அதற்கான திட்டங்களை வகுக்க பாஜக முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மறுபுறம், இந்தியக் கூட்டணியில் சீட் பங்கீடு விவகாரம் சற்று தாமதமானாலும், ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

மம்தா பானர்ஜியின் பேசும் காங்கிரஸ்

இந்தியா கூட்டணியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடனான சீட் பகிர்வு ஒப்பந்தம் நேற்று (புதன்கிழமை) இறுதி செய்யப்பட்ட பின்னர், தற்போது காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் கட்சியான டிஎம்சி உடனான பேச்சுவார்த்தை  தொடங்கி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியா கூட்டணி மீண்டும் புதிய திசையை நோக்கி நகர்கிறது. மேற்கு வங்காளம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸுடன் பேச மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒப்புக்கொண்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆதாரங்களின்படி, மேற்கு வங்கம், அசாம் மற்றும் மேகாலயா மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் டிஎம்சி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அது சாதகமான திசையில் பயணிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியின் கீழ் தொகுதிப் பங்கீடு மேற்கு வங்காளத்தில் டிஎம்சி 36 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் போட்டியிடலாம். முன்னதாக, மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க - India Alliance: டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதி உடன்பாடு

அதேநேரத்தில் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் 6 இடங்களை கேட்கிறது. இதற்கு பதிலாக அசாமில் 2 தொகுதிகளையும், மேகாலயாவில் ஒரு இடத்தையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க காங்கிரஸ் தயாராக உள்ளது. தற்போது இந்த பார்முலா குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தின் இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும்.

இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு

ஆளும் மத்திய அரசுக்கு இந்தியா கூட்டணி மிகப்பெரிய சவாலாக பார்க்கப்பட்டது. ஆனால் மேற்கு வங்கத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் எட்டப்படாத நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். 

அதன் பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அதே பாதையை பின்பற்றினார். இப்படி இந்தியா கூட்டணி சிக்கலில் இருந்த நேரத்தில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த நிதிஷ்குமார் திடீரென அணி மாறி, என்டிஏ கூட்டணியில் இணைந்தார். இது இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும் உ.பி. மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.

மேலும் படிக்க - காங்கிரஸ் கூட்டணிக்கு ஓகே சொன்ன அகிலேஷ்! உ.பியில் 80ல் 17 தொகுதிகளில் திருப்தியான ராகுல் காந்தி

இனி இந்தியா கூட்டணி அவ்வளவு தான். மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இந்தியா கூட்டணி முறிந்துவிடும் என பேசும் அளவுக்கு பிரச்சனை பெரிதாகி கொண்டே போனது.

இந்தியா கூட்டணி அலை வீசியது 

ஆனால் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியா கூட்டணி மீதான அலை மாறியது. சமாஜ்வாதி கட்சி உடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மற்ற கட்சிகளும் காங்கிரஸ் உடன் பேச்சுவாரத்தையில் இணைந்தன. 

பீகார் மற்றும் ஜார்கண்டில் இந்திய கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. காங்கிரஸும் ஆர்ஜேடியும் தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் பேசி வருகின்றனர். அதேபோல ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம் கூட்டணி ஆட்சியில் உள்ளன. இங்கே எந்த பிரச்சனையும் இருக்காது. அதேபோல தமிழ்நாட்டிலும் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. இங்கே எந்த சிக்கலும் இல்லை.

மேலும் படிக்க - அடித்து சொல்கிறேன் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் - கார்த்திக் சிதம்பரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News