அமேதி, ரேபரேலியில் காந்தி குடும்பமே வேண்டாம்: அடம் பிடுக்கும் ராகுல், காத்திருக்கும் கார்கே
Lok Sabha Elections: பிரியங்கா காந்தி வதேராவோ அல்லது ராகுல் காந்தியோ இந்த தொகுதிகளில் போட்டியிட்டால், அது, மாநிலத்தில் கட்சியில் பிடிப்பை மேம்படுத்தும் முயற்சிக்கு வலு சேர்க்கும் என்று உள்ளூர் தொண்டர்கள் கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.
Lok Sabha Elections: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு இன்னும் கட்சி மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இது பெரும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி அல்லது ரேபரேலியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும், இந்த தொகுதிகளில் காந்தி குடும்ப உறுப்பினர் யாரும் போட்டியிடுவதை அவர் விரும்பவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
5 ஆம் கட்ட வாக்குப்பதிவில் அமேதி மற்றும் ரெபரேலி தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. மே 3 ஆம் தேதி 5 ஆம் கட்டத்திற்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாகும். அன்றைய தினத்தில் புனேவில் நடைபெறும் பேரணியில் ராகுல் காந்தி உரையாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ராகுல் கார்கே, ராகுல் காந்தியை அமேதி தொகுதிக்கு சம்மதிக்க வைக்க முயற்சித்து வருவதாகவும் ஆனால், ராகுல் காந்திக்கு இதில் சிறிதும் விருப்பம் இல்லை என்றும் பெயர் சொல்ல விரும்பாத கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | சல்மான் கான் வழக்கில் கைதானவர் தற்கொலை... மும்பையில் அதிர்ச்சி!
ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் பின்னர் அதற்கு எதிராக முடிவு செய்ததாகவும் கூறப்படுகின்றது. காந்தி குடும்பத்தினர் யாரும் இந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதை ராகுல் விரும்பவில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
கடந்த மாதம் நடந்த ஒரு பேரணியில் சந்தித்த போது, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிடம் ராகுல் காந்தி தான் போட்டியிட வேண்டுமா என கேட்டதாகவும், அதற்கு அவர் ராகுல் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என கூறியதாகவும் சொல்லப்படுகின்றது. 2004 முதல் 2014 வரை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவருக்கு மக்களின் உறுதியான ஆதரவின் அடித்தளம் இருப்பதாகவும் அகிலேஷ் யாதவ் ராகுல் காந்தியிடம் தெரிவித்தார், எனினும் ராகுல் காந்தி தான் இப்போது போட்டியிட விரும்பவில்லை என்றும், தனது மனம் மாறினால் தெரியப்படுத்துவதாகவும் அகிலேஷ் யாதவிடம் கூறியதாக கூறப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோல்வியடைந்தார். ரேபரேலி தொகுதியில் ராகுல்-பிரியங்கா காந்தியின் தாயார் சோனியா காந்தி போட்டியிட்டார். இருப்பினும், சோனியா காந்தி மக்களவைத் தேர்தல் போட்டியில் இருந்து விலகி மாநிலங்களவை உறுப்பினரானார்.
பிரியங்கா காந்தி வதேராவோ அல்லது ராகுல் காந்தியோ இந்த தொகுதிகளில் போட்டியிட்டால், அது, மாநிலத்தில் கட்சியில் பிடிப்பை மேம்படுத்தும் முயற்சிக்கு வலு சேர்க்கும் என்று உள்ளூர் தொண்டர்கள் கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.
பாஜகவும் ரேபரேலியில் தங்கள் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் அமேதியில் ஸ்மிருதி இரானி முன்னிலை வகிக்கிறார் என்றும், ஆனால் ரேபரேலி கட்சிக்கு கடினமான தொகுதியாக இருக்கும் என்றும் பாஜகவின் உள்கணிப்புகள் கூறுகின்றன. இதற்கிடையில் அடுத்த 24 முதல் 30 மணி நேரத்தில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | வரலாறு படைத்த ஜிஎஸ்டி வசூல்... ஏப்ரலில் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ