வரலாறு படைத்த ஜிஎஸ்டி வசூல்... ஏப்ரலில் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை!

GST Revenue Collection: 2024 ஏப்ரல் ஏமாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் தொடர்பான ஏப்ரல் மாத புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது வரை இல்லாத சாதனை அளவை எட்டி, புதிய நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் அடிப்படையில் இந்தியா வரலாறு படைத்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 1, 2024, 04:26 PM IST
  • முதன்முறையாக ரூ.2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்
  • 2017ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி.
  • 2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக ஜிஎஸ்டி என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது.
வரலாறு படைத்த ஜிஎஸ்டி வசூல்... ஏப்ரலில் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை! title=

GST Revenue Collection in April 2024: மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர்  நரேந்திர மோடி அரசுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இது வரை இல்லாத அளவுக்குக் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வரி வசூல் ஆகியுள்ளது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024 ஏப்ரல் ஏமாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் தொடர்பான ஏப்ரல் மாத புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது வரை இல்லாத சாதனை அளவை எட்டி, புதிய நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் அடிப்படையில் இந்தியா வரலாறு படைத்துள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு முதல் முறையாக வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 

முதன்முறையாக ரூ.2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்

முதல் முறையாக ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டிய ஜிஎஸ்டி வசூல், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மொத்த வருவாயில் 12.4 சதவீதம் அதிகரித்து சாதனை படைத்துள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. இது தவிர, நிகர வருவாய் ரூ. 1.92 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17.1% அதிகமாகும். ஏப்ரல் 2024க்கான மொத்த ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டி (CGST) ரூ.43,846 கோடி, மாநில ஜிஎஸ்டி (SGST) ரூ.53,538 கோடி, IGST ரூ.99,623 கோடி மற்றும் செஸ் ரூ.13,260 கோடி ஆகியவை அடங்கும்.

மாநிலங்களின் ஜிஎஸ்டி வசூல் விபரம்

மாநிலங்கள் வாரியாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக ரூ.37,671 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. இரண்டாவதாக கர்நாடகாவில் ரூ.15,978 கோடி வசூலாகியுள்ளது. மேலும், மூன்றாவதாக குஜராத்தில் ரூ.13,301 கோடியும், நான்காவதாக உத்தரபிரதேசத்தில் ரூ.12,290 கோடியும் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதற்கடுத்தபடியாக தமிழகத்தில் ரூ.12,210 கோடி வசூலாகியுள்ளது.

மேலும் படிக்க | 8வது சம்பள கமிஷன்: ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் செய்தி.. தேர்தலுக்கு பின் குட் நியூஸ்?

2023-24 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல்

மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின் படி, 2023-24 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20.18 லட்சம் கோடியாக உள்ளது.  இது முந்தைய 2022-23 நிதியாண்டில் ரூ.20 லட்சம் கோடியாக இருந்ததை விட ரூ.0.18 லட்சம் கோடி அதிகமாகும். உள்நாட்டு வர்த்தகம் அதிகரித்ததால் ஜிஎஸ்டி வசூல் வரலாறு காணாத வகையில் அதிக அளவில் இருப்பதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2017ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி 01 ஜூலை 2017 அன்று அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக இது கருதப்படுகிறது. மறைமுக வரியினால் ஏற்படும் பல சிக்கல்களை தீர்க்கும் நோக்கில் அஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய முறையின் மூலம், வாட், கலால் வரி (பல விஷயங்களில்) மற்றும் சேவை வரி போன்ற 17 வகை வரிகள் ரத்து செய்யப்பட்டன. சிறுதொழில்களை ஊக்குவிக்க, ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் வணிகங்களுக்கு ஜிஎஸ்டியின் வரம்பிலிருந்து அரசாங்கம் விலக்கு அளித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்தும் போது, ​​மத்திய அரசு மட்டுமின்றி, மாநில அரசுகளுக்கும் வருவாய்த்துறையில் பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

ஜிஎஸ்டி மசோதா தொடர்பாக அரசியல் கருத்தொற்றுமை

2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக ஜிஎஸ்டி என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் நம் நாட்டிற்கு ஒரு தனித்துவமான வரி  அமைப்பை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஜிஎஸ்டி மசோதா தொடர்பாக அரசியல் கருத்தொற்றுமை பெற 17 ஆண்டுகள் நீண்ட காலம் எடுத்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இறுதியாக 2016 ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றின. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதலுக்குப் பிறகு, ஜிஎஸ்டி சட்டம், 2017 உருவாக்கப்பட்டது.

மேலும் படிக்க | வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News