அமனாக மாறிய அப்துல்லா: 4 மனைவிகள், 4 குழந்தைகள், 17 வயது சிறுமியுடன் காதல்!!
உத்திர பிரதேசத்தின் மீரட்டில், லவ் ஜிஹாத் வழக்கு ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நடுத்தர வயது அப்துல்லா என்பவர் அமன் சௌத்ரியாக மாறி 17 வயது கிஷோரி என்ற பெண்ணை காதல் வலையில் சிக்க வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மீரட்: உத்திர பிரதேசத்தின் (Uttar Pradesh) மீரட்டில், லவ் ஜிஹாத் (Love Jihad) வழக்கு ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நடுத்தர வயது அப்துல்லா என்பவர் அமன் சௌத்ரியாக (Aman Choudry) மாறி 17 வயது கிஷோரி என்ற பெண்ணை காதல் வலையில் சிக்க வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவருக்கு ஏற்கனவே 4 மனைவிகளும் 4 குழந்தைகளும் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
அவர் தனது பெயரை மாற்றி, சிறு வயதுப் பெண்களை தன் வலையில் சிக்க வைத்து, பின்னர் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
காவல்துறையினரின் (Police) கூற்றுப்படி, இந்த வழக்கு கன்கர்கேடா காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தது. நடுத்தர வயது அப்துல்லா (Abdulla), தான் அமன் சவுத்ரி என்று கூறி, 17 வயதான கிஷோரி என்ற பெண்ணை தனது காதலில் சிக்க வைத்தார். அப்பெண்ணை அவர் வெவ்வேறு இடங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. கிஷோரியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவர் அப்பெண்ணை வைத்து ஒரு ஆபாச வீடியோவையும் எடுத்துள்ளார். தான் கூறுவதைக் கேட்கவில்லை என்றால், அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் (Social Media) வைரல் செய்து விடுவதாகவும் அவர் கிஷோரியை மிரட்டியுள்ளார்.
அப்துல்லா போலிப் பெயரை மட்டும் வைத்துக்கொள்ளவில்லை. அவர் பெயருடன் அவர் தலைமுடியும் போலியானதாகவே இருந்தது. உண்மையில், அவரது தலையில் பெரும்பாலான முடி உதிர்ந்து விட்டது. ஆகையால், அப்துல்லா தன்னை இளமையாகக் காட்ட தலையில் போலி முடியை வைத்துக்கொண்டார். கிஷோரியின் குடும்பம் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல்லாவை கைது செய்துள்ளனர். மேலும், கிஷோரியும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
இந்து ஜாக்ரன் மன்ச் தலைவர்களின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர், தனது மருமகன் மூலம், கிஷோரியை காஜியாபாத்துக்கு (Gaziabad) அழைத்துச் சென்றார். அங்கு வாடகை வீட்டில் அவரை தங்க வைத்திருந்தார். இதன் பின்னர், மீரட்டில் உள்ள கங்காநகருக்குச் சென்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு கிஷோரியை தங்க வைத்தார். இந்த விஷயத்தைப் பற்றிய தகவல்கள் வந்தவுடன், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிஷோரியை தேடுமாறு போலீசுக்கு அழுத்தம் கொடுத்தனர். அதன் பிறகு குற்றவாளி பிடிபட்டார்.
மீரட்டின் (Meerut) எஸ்பி சிட்டி அகிலேஷ் நாராயண், “அப்துல்லா தன்னை இளமையாகக் காட்ட இறுக்கமான ஜீன்ஸ் சட்டை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் தனது வழுக்கையை மறைக்க விக்கை பயன்படுத்தினார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் போலீசார் விசாரித்தபோது, அவரது தலைமுடி பற்றிய தகவல்கள் வெளிவந்தன.” என்று கூறினார்.
ALSO READ: ஆம்புலன்ஸ் வாகனத்தில் Covid நோயாளியை பலாத்காரம் செய்த ஓட்டுனர்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR