சாமானியர்களை பாதிக்கும் வகையில் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் 1000 ரூபாயை தாண்டியுள்ளது. சமையல் எல்பிஜி தவிர, வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களும் விலை உயர்ந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1000 ரூபாயை தாண்டிய சிலிண்டர் விலை


இன்று வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3 ரூபாய் 50 காசுகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர்விலை  1000 ரூபாயை தாண்டியுள்ளது. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை உயர்வை அடுத்து, இன்று முதல் டெல்லி மற்றும் மும்பையில் 14.2 கிலோ வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.1003 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1029 ஆகவும், சென்னையில் ரூ.1018.5 ஆகவும் உயர்ந்துள்ளது.


வணிக பயன்பாட்டிற்கான  எல்பிஜி சிலிண்டர்  விலையும் உயர்வு


வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி தவிர, வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலையும் ரூ.8 உயர்ந்துள்ளது. இன்று முதல் டெல்லியில் 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.2354 என்ற விலையிலும், கொல்கத்தாவில் ரூ.2454 என்ற விலையிலும், மும்பையில் ரூ.2306 என்ற விலையிலும், சென்னையில் ரூ.2507 என்ற விலையிலும் கிடைக்கும். மே 7 ஆம் தேதி, வணிக எரிவாயு சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்


மே மாதத்தில் சிலிண்டர் விலை இருமுறை உயர்த்தப்பட்டது


முன்னதாக மே 7ஆம் தேதி வீட்டு எரிவாயு சிலிண்டரில் ரூ.50 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வீட்டு உபயோக காஸ் சிலிண்டரின் விலை, 999.50 ரூபாயை எட்டியது. அதே நேரம், முன்னதாக வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.102 உயர்த்தப்பட்டது.


தொடர்ந்து அதிகரித்து வரும் விலை 


இந்த ஆண்டு எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை பல முறை உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.250 உயர்த்தப்பட்டது. அப்போது அதன் விலை ரூ.2253 ஆக அதிகரித்திருந்தது. முன்னதாக, 2022, மார்ச் 1ம் தேதி அன்று வணிக ரீதியான எல்பிஜியின் விலை ரூ.105 அதிகரித்தது. அதாவது, கடந்த சில மாதங்களாக எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR