நாக்பூர்: வெட்டுக்கிளிகளின் (Locust Attack) தாக்குதலை தடுக்க, மக்கள் வெடிகளை வெடித்து, மேள தாளங்களை அடிக்க வேண்டும் என்றும் மகாரஷ்ட்ரா (Maharashtra) உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் (Anil Deshmukh) கேட்டுக்கொண்டுள்ளார். கடோல் நாடாளுமன்ற தொகுதியில், வெட்டுக்கிளிகளின் (Locust) தாக்குதல் குறித்த நிலைமையை அமைச்சர் பார்வையிட்டார். எப்போது வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்தினாலும் கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், மக்கள் வெடிகளை வெடித்து (Firecrackers) , மேள தாளங்களை அடிக்க வேண்டும் என்றும், அல்லது டயர்களை எரிக்க வேண்டும் என்றும்  அவர் விவசாயிகள் மத்தியில் பேசும்போது கூறினார்.
 
முன்னதாக, மாநில வேளாண்துறையால் சுமார் 50 சதவிகித வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்ட்ரா (Maharashtra) விவசாயத்துறை அமைச்சர் தாதாபூஷே (Dada Bhuse) தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Also Read: ஒரு நாளைக்கு 81 மைல்களுக்கு மேல் பயணிக்க வெட்டுக்கிளிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்


சுமார் 50 சதவிகித வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வண்டிகள் பூச்சிமருந்துகளை தெளிக்க பயன் படுத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட இடங்களில் விவசாயிகளுக்கு பூச்சி மருந்துகளையும், ரசாயனங்களையும் இலவசமாக அளிக்கின்றோம் என்றும் பூஷே கூறினார். 


பாகிஸ்தானில் (Pakistan) இருந்து வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான் (Rajasthan), பஞ்சாப் (Punjab), ஹரியானா (Haryana), மற்றும் மத்தியப் பிரதேசத்திற்குள் (Madhya Pradesh) நுழைந்துள்ளன. இது பருத்தி பயிர்கள் மற்றும் காய்கறிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். வெட்டுக்கிளிகளின் தாக்குதலில் (Locust Swarms Attack) ராஜஸ்தான் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று அவர் கூறினார். 


Also Read: வெட்டுக்கிளி தாக்குதலை விவசாயிகள் எவ்வாறு கையாள்கிறார்கள்


பாலைவன வெட்டுக்கிளி என்பது வெட்டுக்கிளியின் ஒரு இனமாகும். இது ஒரு குறுகிய கொம்பு வெட்டுக்கிளியாகும். அவைகள் தங்களின் பாதையில் இருக்கக்கூடிய அனைத்தையும் தின்றுவிடுகின்றன. இதனால் முன்னெப்போதும் இல்லாதவகையில் உணவு சங்கிலி மற்றும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.


(மொழியாக்கம்: நிவாஸ்)