மகாராஷ்டிராவில் உள்ள அகமதுநகர் சிவில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சனிக்கிழமை (நவம்பர் 6) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போசலே, "அகமதுநகர் மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் (Fire Accident) 10 பேர் உயிரிழந்தனர்." என்று கூறினார்.


மருத்துவமனையில் தீ பரவியவுடன், நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. மற்ற வார்டுகளுக்கு பரவிய தீயை இந்த தீயணைப்பு வாகனங்கள் கட்டுப்படுத்தின என  IANS தெரிவித்துள்ளது.


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவமனை அதிகாரிகள், உள்ளூர்வாசிகள் மற்றும் மீட்புக் குழுக்கள், பல நோயாளிகளை அண்டை வார்டுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்” என்று அகமதுநகர் காவல் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



ALSO READ:தீபாவளி ஷாப்பிங்கில் விபரீதம்: கடை எஸ்கலேட்டரிலிருந்து விழுந்த 7 வயது சிறுவன் 


மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வரும் சம்பவ இடத்தில், உயர் போலீஸ் அதிகாரிகள், மாவட்ட மற்றும் தீயணைப்பு படை அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர்.


இதனிடையே, விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர (Maharashtra) அமைச்சர் நவாப் மாலிக் உறுதியளித்துள்ளார். "குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் தீயணைப்புத் தணிக்கைக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தன. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த மருத்துவமனையில் தீ தணிக்கை செய்யப்படாவிட்டால், யார் பொறுப்பு? தீ தணிக்கை ஒரு புறம் இருக்க, இது யாருடைய தவறு என்பது பற்றியும் விசாரிக்கப்படும்.” என்று அவர் கூறியுள்ளார்.


குறைந்தபட்சம் 20 நோயாளிகள் சிவில் மருத்துவமனையின் (Hospital) ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குப் பிறகு, ஏராளமான உறவினர்கள் தங்கள் உறவினர்களைப் பற்றிய தகவலுக்காக மருத்துவமனைக்கு விரைந்ததாக நேரில் பார்த்தவர்கள் IANS இடம் தெரிவித்தனர். மதியம் 1 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ICU வார்டு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.


ALSO READ:பட்டாசு கடையில் விபத்து கொழுந்துவிட்டு எரியும் தீ! உயரும் பலி எண்ணிக்கை! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR