மகாராஷ்டிர அரசு: ரெசிடென்ட் மருத்துவர்களுக்கு 1.21 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை

அரசு மற்றும் நகராட்சி மருத்துவக் கல்லூரிகளில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ரெசிடெண்ட் மருத்துவர்களுக்கு தலா 1.21 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்கப்படும்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 9, 2021, 09:09 PM IST
  • ரெசிடெண்ட் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை
  • மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்தது
  • கல்வித்தொகை கட்டண தள்ளுபடி கிடையாது
மகாராஷ்டிர அரசு: ரெசிடென்ட் மருத்துவர்களுக்கு 1.21 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை  title=

மும்பை: ரெசிடென்ட் மருத்துவர்களுக்கு மகாராஷ்டிர மாநில அரசு 1.21 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்க முடிவு செய்துள்ளது. தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக ரெசிடென்ட் மருத்துவர் சங்கத்தினர் முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு மாநில அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.  

மாநிலம் முழுவதும் உள்ள ரெசிடெண்ட் மருத்துவர்களுக்கு (Maharashtra Association of Resident Doctors) பெரும் நிவாரணமாக மகாராஷ்டிரா அரசு சனிக்கிழமை அன்று ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.

அரசு மற்றும் நகராட்சி மருத்துவக் கல்லூரிகளில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் தலா 1.21 லட்சம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்று உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது.

ரெசிடென்ட் மருத்துவர் சங்கத்தினர் முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்த போது, தொற்றுநோய்களின் போது ரெசிடெண்ட் மருத்துவர்களின் பணியைப் பாராட்டிய அவர், அவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார், ஆனால் அவர்களின் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்வது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.

READ ALSO | அக்டோபர் 09; தமிழகத்தின் இன்றைய கோவிட் பாதிப்பு

மகாராஷ்டிராவில் 4,000 க்கும் மேற்பட்ட ரெசிடெண்ட் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்வது, 

தொற்றுநோய்களின் போது வழங்கப்படும் சேவைகளுக்கு இடர் ஊக்கத்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொற்றுநோய் காலத்தில் தங்களுக்கு வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட முதல் நாளிலிருந்து சேவை செய்யும் அவர்களுக்கு பலவிதமான அழுத்தங்கள் இருந்த்தையும் சுட்டிக் காட்டிய ரெசிரெண்ட் மருத்துவ சங்கத்தின் மாணவர்கள் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யக் கோரினர்.

மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விடுதி நிலைமைகளை மேம்படுத்தவும், மும்பை மாநகராட்சியின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் குடியிருப்பு மருத்துவர்களின் ஊக்கத்தொகையிலிருந்து TDS (tax deduction at source) கழிக்கப்படக்கூடாது என்றும் ரெசிடெண்ட் மருத்துவர்கள் (resident doctors) கோரிக்கை விடுத்திருந்தனர். 

ALSO READ |  அடுத்த 3 மாதங்களுக்கு கவனம் தேவை: எச்சரிக்கும் சுகாதாரச் செயலர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News