பட்டாசு கடையில் விபத்து கொழுந்துவிட்டு எரியும் தீ! உயரும் பலி எண்ணிக்கை!

தீயணைப்பு வீரர்கள் தீயை‌ அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு கடை என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 26, 2021, 09:28 PM IST
பட்டாசு கடையில் விபத்து கொழுந்துவிட்டு எரியும் தீ! உயரும் பலி எண்ணிக்கை!

கள்ளக்குறிச்சி: தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருவதால் பட்டாசுக் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பட்டாசு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர் மற்றும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது மற்றும் அதற்கு காரணம் யார் என்ற கோணத்தில் காவல்துறையினர் ஒருபுறம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதேபோல் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை‌ அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு கடை என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. அருகில் இருந்த பேக்கரி கடை எரிவாயு சிலிண்டரும் வெடித்துச் சிதறியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

இந்த தீ விபத்தால் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News