தீபாவளி ஷாப்பிங்கில் விபரீதம்: கடை எஸ்கலேட்டரிலிருந்து விழுந்த 7 வயது சிறுவன்

மதுரையிலுள்ள பிரபல ஜவுளிக்கடை மாடியில் இருந்து தவறி விழுந்து 7வயது சிறுவன் படுகாயம் அடைந்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2021, 05:44 PM IST
தீபாவளி ஷாப்பிங்கில் விபரீதம்: கடை எஸ்கலேட்டரிலிருந்து விழுந்த 7 வயது சிறுவன் title=

மதுரையிலுள்ள பிரபல சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடை மாடியில் இருந்து தவறி விழுந்து 7வயது சிறுவன் படுகாயம் அடைந்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை எஸ்.எஸ்.காலனி அருகேயுள்ள வைத்தியநாதபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவருடையை மனைவி மற்றும் அவர்களது 7வயது மகன் நித்திஸ் தீனா ஆகியோர் இன்று காலை மதுரை அழகப்பன் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஜவுளிக்கடையில் தீபாவளி (Diwali) பண்டிகைக்காக துணி எடுக்க சென்றுள்ளனர். துணிகளை வாங்கிவிட்டு 5வது மாடியில் இருந்து எஸ்கலேட்டர் வழியாக இறங்க முயன்றபோது எஸ்கலேட்டர் அருகில் இருந்த இடைவெளியில் திடீரென சிறுவன் சென்றதால் தவறி விழுந்து 5வது மாடியிலிருந்து இருந்த கீழே விழுந்துள்ளான். 

அடுத்தடுத்து மாடிகளில் உள்ள கல்தூண்களில் சிறுவனின் தலை இடித்ததில் தலை உடைந்து அதிகளவிற்கு ரத்தம் வெளியேறியது. இதில் சிறுவன் மயக்க நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ALSO READ: கழிவறையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண், பெண் சடலம்

கடையில் இருந்த எஸ்கலேட்டர் அருகில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி தடுப்புகள் உரிய முறையில் இல்லாத காரணத்தால்தான் குழந்தை தவறி விழுந்து படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே அவசர அவரசரமாக சம்பவம் நடைபெற்றதற்கான ரத்த அடையாளங்களை ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி அழித்ததால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். 

மேலும் விபத்து குறித்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தியபோது ஊழியர்கள் உரிய விளக்கம் அளிக்காமல் காவல்துறையினரை திசை திருப்பியதோடு, இரத்தம் வடிந்த தடயத்தை காவல்துறையினரின் (Police) கண் முன்பாகவே தண்ணீர் ஊற்றி அழித்துள்ளனர். 

விபத்து (Accident) ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிறுவன் உயிருக்கு போராடிவரும் நிலையில், கடை நிர்வாகமோ எந்தவித பதட்டமும் இன்றி தொடர்ந்து பொதுமக்களை வியாபாரத்திற்கு அனுமதித்தது வருகிறது. இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் உரிய வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ALSO READ: தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஓட ஓட விரட்டிக்கொலை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News