புதுடெல்லி:  காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடா குற்றச்சாட்டுகள் சுமத்திய நிலையில், கனடாவிலுள்ள இந்திய தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாடு உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே, கனடாவின் மூத்த தூதரக அதிகாரியை அடுத்த 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு உத்தரவிட்டது. "இந்தியாவிற்கான கனடா உயர் கமிஷனர் இன்று வரவழைக்கப்பட்டு, இந்தியாவை தளமாகக் கொண்ட கனடா நாட்டின் மூத்த தூதரக அதிகாரியை வெளியேற்றும் இந்திய அரசின் முடிவு குறித்து தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கனடா நாடாளுமன்றத்தில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்திய ஏஜென்டுகளின் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிப்பதாகக் கூறியிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா-கனடா உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், கனடாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து இந்திய பிரஜைகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தலில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான அஜண்டாவை எதிர்க்கும் இந்திய இராஜீய அதிகாரிகள் மற்றும் இந்திய சமூகத்தின் சில பிரிவுகள் குறிப்பாக குறி வைக்கப்படுகின்றனர் என்று வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs) கூறுகிறது. கனடாவில் தாக்குதல் சம்பவங்கள் நடந்த பகுதிகள் மற்றும் தாக்குதல் நடத்தக் கூடிய சாத்தியமான இடங்களுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்குமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


"கனடாவில் அதிகரித்து வரும் இந்திய - விரோத நடவடிக்கைகள் மற்றும் அரசியல் ரீதியிலான வெறுப்புக் குற்றங்கள் மற்றும் குற்றவியல் வன்முறைகளைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள அனைத்து இந்திய நாட்டவர்களும், பயணம் செய்ய நினைப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சமீபத்தில், குறிப்பாக இந்திய தூதர்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான அஜண்டாவை எதிர்க்கும் இந்தியப் பிரிவினரை குறி வைத்து அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. எனவே இந்திய குடிமக்கள் கனடாவில் இது போன்ற சம்பவங்கள் நடந்த பகுதிகள் மற்றும் சாத்தியமான இடங்களுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனவெளியுறவு அமைச்சகம் தனது ஆலோசனையில் தெரிவித்துள்ளது.



மேலும் படிக்க | சான் பிரான்சிஸ்கோ இந்திய தூதரகத்திற்கு தீவைப்பு! காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டகாசம்


இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், கனடாவில் இது போல எந்த ஒரு தடையும் அந்த அமைப்பின் மீது இல்லை. இதன் காரணமாகவே அங்குள்ள ஒரு தரப்பினர் காலிஸ்தான் பிரிவினைவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து செயலபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த விவகாரம் அங்கே மிக முக்கிய விவகாரமாக மாறி வருகிறது. வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கனடா தூதர் வெளியேற ஆணை! பதிலடி கொடுக்கும் இந்தியா! விரிசலைடையும் உறவுகள்


இந்திய அரசால் கனடா மண்ணில் ஒரு படுகொலை நிகழ்த்தப்பட்டதாக அந்த நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆதாரங்களை ஜி20 மாநாட்டிற்கு வந்தபோது கொடுத்துள்ளதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கனடா பிரதமரின் கூற்றை மறுத்து கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு, கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை சேர்ந்த ஒரு அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது.


மேலும் படிக்க | சீன ஜி 20 பிரதிநிதிகளிடம் இருந்த மர்ம சாதனங்கள் எதற்கு? டெல்லி தாஜ் ஹோட்டல் பரபரப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ