சீன ஜி 20 பிரதிநிதிகளிடம் இருந்த மர்ம சாதனங்கள் எதற்கு? டெல்லி தாஜ் ஹோட்டல் பரபரப்பு

G20 And Chiina: டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்த சீன அதிகாரிகளின் பைகளை ஸ்கேன் செய்யுமாறு பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டபோது மறுத்த மர்மம் என்ன?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 14, 2023, 02:04 PM IST
  • டெல்லியில் மர்மமாய் நடந்து கொண்ட சீன அதிகாரிகள்!
  • சீனாவின் மர்ம பைகள்
  • ஜி 20க்கு பிறகும் தொடரும் பாதுக்காப்பு பிரச்சனை
சீன ஜி 20 பிரதிநிதிகளிடம் இருந்த மர்ம சாதனங்கள் எதற்கு? டெல்லி தாஜ் ஹோட்டல் பரபரப்பு title=

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் வெற்றிகரமாக நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாடு அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்றது. ஆனால், டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்த சீன அதிகாரிகளின் பைகளை ஸ்கேன் செய்யுமாறு பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டபோது அவர்கள் மறுத்து அதில் இருந்ததை மறைந்த மர்மம் தொடர்பாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்திய அதிகாரிகளை எந்த விசாரணையும் நடத்த விடாமல் சீன பிரதிநிதிகள் சீன தூதரகத்திற்கு அந்தப் பைகளை மாற்றியதால் அந்த பைகளுக்குள் என்ன மறைத்து வைக்கப்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை.

சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவில் நடைபெற்ற மெகா நிகழ்வைத் தவிர்த்ததால், இந்தியாவின் ஜி 20 உச்சி மாநாட்டில் சீனா பரபர்ப்பு ஏற்படுத்த முயற்சித்ததா? இந்திய ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் இந்தக் கேள்விஐ எழுப்புகிறது.  

சீனாவின் G20 குழுவில் இடம் பெற்றிருந்த அதிகாரிஅக்ள் சந்தேகத்திற்கு இடமான உபகரணங்களுடன் 20 பெரிய பைகளை எடுத்துச் சென்றதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்த 6 சீன அதிகாரிகள் குழுவிற்கு ஒரு பெண் தலைமை தாங்கினார். அந்த மர்மமான பைகளை ஸ்கேன் செய்யுமாறு பாதுகாப்பு அதிகாரிகள் சொன்னபோது, ​​அந்தப் பெண் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததோடு, சோதனைக்காக அவற்றை வழங்கவும் மறுத்துவிட்டார்.

மேலும் படிக்க | சீனாவை பதற வைத்த இந்தியா! ஜி 20 மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

இதனால் ஹோட்டலில் 12 மணி நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டது, சீன அதிகாரிகள் ஹோட்டலின் ஆறாவது மாடியில் தங்கியிருந்தனர். ஹோட்டல் நிர்வாகம், பாதுகாப்புக் காரணங்களுக்காக ஸ்கேன் செய்வது அவசியம் என தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் அவர்கள் தங்களிடம் இருந்த மர்மப் பைகளை புதுதில்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு பைகளை பத்திரமாக கொண்டு சென்றுவிட்டனர் என்பது சந்தேகங்களை அதிகமாக்குகிறது.

பைகளின் அசாதாரண அளவு
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, பைகள் வழக்கத்திற்கு மாறாக பெரியதாக இருந்தன. அவை "1x1 மீட்டர் நீளம் மற்றும் அகலம் மற்றும் 10 அங்குல தடிமன்" என்ற வித்தியாசமான அளவில் இருந்தன. டைம்ஸ் மேற்கோள் காட்டிய அதிகாரியின்படி, வியன்னா மாநாட்டின் கீழ் வகுக்கப்பட்ட நெறிமுறையின்படி விமான நிலையத்தில் பைகள் சரிபார்க்கப்படவில்லை.

அந்த பைகளுக்குள் என்ன இருந்தது?
ஜி 20 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக வந்த சீனப் பிரதிநிதிகள், இந்திய அதிகாரிகளை எந்த விசாரணையும் நடத்த விடாமல், சீனத் தூதரகத்துக்கு விரைவாகக் கொண்டு சென்றதால், அந்தப் பைகளுக்குள் என்ன மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது இன்னும் தெரியவில்லை.

மௌனம் காக்கும் சீனத் தரப்பு

ஆதாரங்களின்படி, இந்த விவகாரம் இப்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது; இருப்பினும், அந்த பெரிய பைகளில் என்ன உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டன என்பதை கண்டறியும் முயற்சிகள் இன்னும் நடந்து வருகின்றன. ஆனால், சீனா இது குறித்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறது.

தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் யார்?
லுலா டா சில்வா தலைமையிலான பிரேசிலிய G20 தூதுக்குழு அதே ஹோட்டலில் தங்கியிருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் போன்ற பிற மாநிலங்களின் தலைவர்கள் அருகிலுள்ள ஐடிசி மவுரியா ஹோட்டலில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | G-20: வெளிநாடு விருந்தினர்களுக்கு ₹ 18 கோடி வாடகையில் 20 லிமோசின் கார்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News