கொரோனாவையும் பெட்ரோல், டீசல் விலையையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறி விட்டது என ராகுல் காந்தி காட்டம்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை மோடி அரசாங்கத்திடம் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் -19 பாதிப்புகள் குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனாவையும் பெட்ரோல், டீசல் விலையையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறி விட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். 


கொரோனா வைரஸ் பாதிப்புகள் புதன்கிழமை 4.56 லட்சத்தைத் தாண்டினாலும், கடந்த இரண்டு வாரங்களில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒவ்வொரு நாளும் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது... “ கொரோனா லாக்டவுனால் நாட்டின் பொருளாதாரம் மோசமாக வீழ்ச்சி அடைந்தது. லாக்டவுன் இதைத்தான் நிரூபிக்கிறது. ஒரே விஷயம்தான், அறியாமையைவிட அகங்காரம் மிகவும் ஆபத்தானது” என ஒரு வரைபடத்துடன் கூடிய ஒரு ட்விட்டர் பதிவை அவர் பதிவிட்டுள்ளார். 



ராகுல் காந்தி தொடர்ந்து மோடி அரசு மீது தாக்குதல்களை நடத்தி வருகிறார். கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சுமார் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட பின்னர் சீனாவுடன் லடாக் எல்லை நிலைமையை மோடி அரசு கையாண்டது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனில் நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது. அதேசமயம் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி முதல் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 17-வது நாளாக விலை அதிகரிப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10.49 பைசாவும் அதிகரித்துள்ளது.


அதேசமயம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றை நிலவரப்படி, இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 14 லட்சத்து 56 ஆயிரத்து 183 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 465 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 14 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது


இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசை விமர்சித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து, வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், “மத்தியில் ஆளும் மோடி அரசு, கொரோனா வைரஸ் பரவலையும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. லாக்டவுனுக்குப் பின் கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டும் நாட்டில் நாள்தோறும் உயரவில்லை. பெட்ரோல் - டீசல் விலையும் உயர்ந்து வருகிறது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.