விவசாயிகளுக்கு புத்தாண்டு பரிசாக பயிர்கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்கிறது மத்திய அரசு?.... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயிர் கடன்களுக்கான மாத தவணையை, கெடுவிற்குள் தவறாமல் செலுத்துபவர்களுக்கு, வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, 7 சதவீத வட்டியில், 3 லட்சம் ரூபாய் வரை, குறுகிய கால பயிர் கடன்களை, மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த கடன் தொகைக்கான மாத தவணையை, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாமல் செலுத்துபவர்களுக்கு வட்டியில் 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதையடுத்து, 4 சதவீத வட்டியை விவசாயிகள் செலுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வாக, குறிப்பிட்ட கெடுவிற்குள் பயிர் கடன் தவணையை செலுத்துபவர்களுக்கு, வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், மத்திய அரசுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, கூறப்படுகிறது. விவசாயிகளுக்கு புத்தாண்டு பரிசாக இந்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.