புதுடெல்லி: கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக பெற்றோரை இழந்து துரதிஷ்டவசமாக அனாதைகளாக ஆன அனைத்து குழந்தைகளுக்கும் 'பி.எம்-கேர்ஸ் ஃபார் சில்ட்ரன்' ('PM-CARES for Children’) திட்டத்தின் கீழ் ஆதரவு அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"குழந்தைகள்தான் நமது நாட்டின் எதிர்காலம். நமது குழந்தைகளை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் தேவையான அனைத்தையும் நாடும் அரசும் செய்யும். அவர்கள் வலுவான குடிமக்களாக வளர்ந்து பிரகாசமான எதிர்காலத்தைப் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது நமது கடமையாகும்" என்று பிரதமர் மோடி (PM Modi) கூறினார்.


பிரதம மந்திரி அலுவலகம் வெளிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் ஆதரவுக்கான பல்வேறு நடவடிக்கைகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன் பி.எம்-கேர்ஸ் நிதியிலிருந்து மாதாந்திர உதவித்தொகையும், 23 வயதை அடைந்ததும் ரூ .10 லட்சம் நிதியும் வழங்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


ALSO READ: Corona Relief: கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி – தமிழக அரசு


இதன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள பிற நன்மைகள் பின்வருமாறு: 


- குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன் மாதாந்திர உதவித்தொகையும், 23 வயதானவுடன் ரூ .10 லட்சம் நிதி உதவியும் PM CARES மூலம் வழங்கப்படும்.  


- கோவிட்-19 (COVID-19) பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி உறுதி செய்யப்படும். 


- உயர்கல்விக்கான கல்விக் கடனைப் பெற குழந்தைகளுக்கு உதவி செய்யப்படும். இந்த கடனுக்கான வட்டியை PM CARES செலுத்தும்


- ஆயுஷ்மான் பாரதத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு 18 வயது வரை ரூ .5 லட்சம் இலவச சுகாதார காப்பீடு கிடைக்கும். இதற்கான பிரீமியம் PM CARES மூலம் செலுத்தப்படும்.


கோவிட் -19 தொற்றுநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் தேவையான நடவடிக்கைகளுக்கான ஆயத்தங்களை செய்வது பற்றி கலந்தாலோசிக்கவும் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கைகள் பற்றி அறிவிக்கப்பட்டன.


ALSO READ:நாடு முழுவதும் 551ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க PM CARES நிதியிலிந்து ஒதுக்கீடு



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR