PM Narendra Modi Russia Visit: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 7 மணிக்கு ரஷ்யா புறப்பட்டார். ரஷ்யாவின் கசான் நகரில் 2 நாட்கள் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக்கொள்வார். பிரதமர் மோடி கடந்த 4 மாதங்களில் இரண்டாவது முறையாக ரஷ்யா செல்கிறார். முன்னதாக, ஜூலை மாதம் இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று மாலை பிரிக்ஸ் தலைவர்களுடன் விருந்தில் கலந்து கொள்கிறார். ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச உள்ளார். பல தலைவர்களுடனும் அவர் முறைசாரா பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.


பிரிக்ஸ் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி


நாளை (புதன்கிழமை) நடைபெறும் பிரிக்ஸ் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இரண்டு அமர்வுகளாக நடைபெறும். காலையில் முதல் அமட்கு நடைபெறும். அதாவது ஒரு மூடிய அறை விவாதம் இருக்கும். இதைத் தொடர்ந்து மாலையில் திறந்தநிலைக் கூட்டம் நடைபெறும். இதில் பிரதமர் மோடி பல தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்துவார்.



சீன அதிபருடன் பேச்சு வார்த்தை சாத்தியமா?


பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளது. லடாக்கில் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவருக்கொருவர் பேசுவார்களா?


அத்தகைய சூழ்நிலையில், பிரதமர் மோடி மற்றும் ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது நடந்தால் இரு தலைவர்களும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவருக்கொருவர் பேசுவார்கள். இருவரும் கடைசியாக 2022 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது சந்தித்தனர்.


அதேநேரம் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இரு தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். ஆனால் இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசவில்லை.


பிரிக்ஸ் பிளஸ்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்


பிரதமர் மோடி அக்டோபர் 23 ஆம் தேதி ரஷ்யாவில் இருந்து புறப்படுகிறார். இதற்குப் பிறகு, அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும் பிரிக்ஸ் பிளஸ் நாடுகளின் அமர்வில் இந்தியக் குழுவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை தாங்குகிறார்.


பிரிக்ஸ் பிளஸ் உச்சி மாநாடு


இந்த உச்சி மாநாட்டில் மொத்தம் 28 நாடுகளும் 5 சர்வதேச அமைப்புகளும் பங்கேற்கின்றன. உச்சிமாநாட்டிற்குப் பிறகு, பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு அறிக்கை அதாவது கசான் பிரகடனம் வெளியிடப்படும். கசானில் இந்தியா புதிய தூதரகத்தையும் திறக்கலாம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் வசிக்கின்றனர்.


இதுவரை 15 முறை நடத்தப்பட்ட பிரிக்ஸ் மாநாடு


BRIC நாடுகளின் முதல் உச்சி மாநாடு 2009 இல் நடைபெற்றது. இது ரஷ்யாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் பிறகு, 2010 இல் தென்னாப்பிரிக்கா இணைந்த பிறகு, அதன் பெயர் BRICS என மாற்றப்பட்டது. பிரிக்ஸ் மாநாடு இதுவரை 15 முறை நடத்தப்பட்டுள்ளது. இம்முறை 16வது உச்சி மாநாடு நடைபெறுகிறது.


விளாடிமிர் புடின் 


ரஷ்யா இதுவரை மூன்று முறை பிரிக்ஸ் மாநாட்டை நடத்தியுள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக விளாடிமிர் புடின் பதவியேற்பது இது நான்காவது முறையாகும்.


மேலும் படிக்க - CRPF பள்ளி அருகே... பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள்... டெல்லியில் பரபரப்பு


மேலும் படிக்க - பாபா சித்திக் கொல்லப்பட்டது எப்படி...? குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு? - பரபர தகவல்கள்==


மேலும் படிக்க - BRICS Summit: அமைதி, வளர்ச்சிக்கு ஒற்றுமை அவசியம்; மோடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ