தேசிய பெண் குழந்தைகள் தின கொண்டாட்டம்! சரித்திரமும் முக்கியத்துவமும்!
2008 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதியை, தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்...
புதுடெல்லி: தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடுவதற்கான காரணம் என்ன? வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இந்த நாளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்
2008 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதியை, தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.
இந்திய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்புவதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.
பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ, பெண் குழந்தைகளைக் காப்பது, இலவச/ மானியக் கல்வி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற அரசாங்கத்தின் பிரச்சாரங்கள் மற்றும் திட்டங்களை இந்திய அரசு முன்னெடுத்துள்ளது.
ALSO READ | தனியுரிமையை மதிக்க வேண்டாமா? ரசிகர்களின் கோரிக்கை
ஆண்டுதோறும், ஒரு புதிய கருப்பொருளின் அடிப்படையில், பெண் குழந்தைகளுக்கான தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் அறிவிக்கப்படவில்லை.
2019ஆம் ஆண்டில், 'ஒளிமயமான நாளைக்காக பெண்களை மேம்படுத்துதல்' என்றும், 2020 இல் ‘எனது குரல், எங்கள் பொதுவான எதிர்காலம்’ என்றும், 2021 இல், ‘டிஜிட்டல் தலைமுறை, எங்கள் தலைமுறை’ என்பதும் தேசிய பெண் குழந்தைகள் தினத்திற்கான கருப்பொருளாக இருந்தது.
ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதை குடும்பமும், சமூகமும் உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்.
ALSO READ | நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார் - உயிர் தப்பிய 3 மாணவர்கள்
பெண்களைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள். பெண் என்பவள், சுமையோ அல்லது கணவன் வீட்டிற்கான பெண் என்ற மனோபாவத்தை மாற்றவும். ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு இடையில் வேறுபாடு பார்க்காமல் சமத்துவத்தை மேம்படுத்தவும்.
சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் மற்றும் நாட்டின் முன்மாதிரி பெண்களின் பெயர்களில் சாலைகள் மற்றும் சதுக்கங்களில், கிலோமீட்டர் நீளமுள்ள ரங்கோலி அலங்காரங்கள் 50 இடங்களில் செய்யப்படும்.
பெண் குழந்தைகளுக்கான இந்த நாளில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி மற்றும் மாநில அமைச்சர் முஞ்ச்பாரா மகேந்திரபாய் ஆகியோர் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்கின்றனர்.
அந்த நிகழ்ச்சியில், பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (Pradhan Mantri Rashtriya Bal Puraskar) விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடுவார்.
ALSO READ | மர்ம விலங்கு கடித்து 15 செம்மறி ஆடுகள் பலி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR