ஞாயிற்றுக்கிழமை கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
இந்த போட்டியின்போது, 63 பந்துகளில் அரை சதம் அடித்த கோஹ்லி, தனது அரை சதத்தை மகள் வாமிகாவுக்கு அர்ப்பணித்தார்.
போட்டியின் போது விராட் கோலி தனது அரை சதத்தை மகள் வாமிகாவுக்கு 'தாலாட்டு பாடல்' உடன் அர்ப்பணித்த வீடியோ வைரலாகிறது.
கோஹ்லியின் மனைவியும் பாலிவுட் நட்சத்திரமான அனுஷ்கா ஷர்மா, முன்னாள் இந்திய கேப்டனை உற்சாகப்படுத்துவதற்காக, மைதானத்திற்கு வந்திருந்தார்.
ALSO READ | மைதானத்தில் தாலாட்டு பாடிய கோலி..! வைரல் வீடியோ
இதற்கு முந்தைய ஆட்டத்தில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டான பிறகு அருமையாக விராட் விளையாடியதை அவரது குடும்பத்தினர் கொண்டாடினார்கள்.
அப்போது, மைதானத்தில் அம்மாவுடன் இருந்த கோஹ்லியின் மகள் வாமிகாவின் படங்கள் மற்றும் வீடியோக்கள் விரைவில் சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த மாத தொடக்கத்தில் தங்கள் மகளின் முதல் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய கோஹ்லியும் அனுஷ்காவும் எப்போதும் ஊடகங்களில் அவள் முகத்தை வெளிப்படுத்தாமல் கவனமாக பார்த்துக் கொண்டனர்.
ALSO READ | ருதுராஜ் கைக்வாட்-டை தொடர்ந்து புறக்கணித்து வரும் இந்திய அணி!
இந்த நட்சத்திர ஜோடி, தங்கள் மகளின் படங்களை கிளிக் செய்ய வேண்டாம் மற்றும் அவர்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்றும் ஊடக நபர்களிடம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை, கோஹ்லி தனது அரை சதத்தை மகள் வாமிகாவை அர்ப்பணித்தபோது, ஸ்டாண்டில் தனது மகளுடன் நின்றிருந்த அனுஷ்காவை நோக்கி திரும்பிய கேமராக்கள், வீடியோக்களையும் புகைபடங்களையும் எடுத்துத் தள்ளின.
அவை, சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் பரவின. இதை பலரும் விரும்ப்பினாலும், பல ரசிகர்கள், பெற்றோரின் உணர்வை மதிக்க வேண்டும், அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை மதிக்க வேண்டும் என்று கருத்து பதிவிட்டுள்ளனர்.
I'm begging all of you please delete that vamika video and Pic from your phone. Please respect their privacy please
— Rahul (@Ittzz_Rahul) January 23, 2022
ஞாயிற்றுக்கிழமை கேப்டவுனில் நடந்த விளையாட்டின் போது, வாமிகாவை படம்பிடித்த கேமராமேன் மீது சில ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சனங்களை முன்வைத்தனர்.
கோஹ்லி மற்றும் அனுஷ்காவின் தனியுரிமையை மதிக்குமாறும், அவர்களுடைய மகளின் கிளிப்களை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு, 'Respect their privacy' என்று கேட்டுக் கொண்டனர். இந்த கோரிக்கையும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
ALSO READ | கே.எல். ராகுல் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி!
விராட் கோலியின் தாலாட்டு பாட்டு வீடியோ வைரலாகும் நிலையில், அவரது குடும்பத்தின் தனியுரிமையை மதிக்க வேண்டாமா என்ற நெட்டிசன்களின் குரல் சமூக ஊடகங்களில் உரத்து ஒலிக்கிறது.
please stop sharing vamika's photos, it is clearly against her parent's will, is it that tough to respect someone's privacy??
— zenitsu | (@7madridrings) January 23, 2022
இந்த போட்டியில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மீண்டும் சிறப்பாக ஆடி 84 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் சேர்த்து மொத்தம் 65 ரன்கள் எடுத்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR