New Wage Code: தொழிலாளர்களுக்கான ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள் மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் ஆகிய நான்கு தொழிலாளர் குறியீடுகளை அடுத்த நிதியாண்டில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக, மூத்த அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான பிடிஐயிடம் தெரிவித்தார். புதிய ஊதிய குறியீடு அமலுக்கு வந்தால், அவை வேலை நேரம், சம்பளம் மற்றும் PF பங்களிப்பு ஆகியவற்றில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தும்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு, வரும் நிதியாண்டில் புதிய ஊதியக் குறியீட்டை (New Wage Code)அமல்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், மாத சம்பளம், வேலை நாட்கள் உள்ளிட்ட பல விதிகள் மாறுகின்றன. 


ALSO READ | Budget 2022: பட்ஜெட் தயாரிப்புகள் தீவிரம்! தனியார் துறையினரிடம் மத்திய அரசு ஆலோசனை
 


புதிய ஊதியக் குறியீடு தொடர்பாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:


- இதில், வேலை நாட்கள் தொடர்பாக புதிய நெறிமுறைகள் அமல்படுத்தப்படும். அதாவது, நீங்கள் இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும். இதன் மூலம் உங்கள் வார இறுதி விடுமுறை 2 நாட்களில் இருந்து 3 நாட்களாக அதிகரிக்கும். 


- எனினும் மூன்று வார இறுதி விடுமுறை பெற நேர 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டு. அதாவது ஊழியர்கள் வாரத்தில் மொத்தம் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஒரு நாளின் வேலை நேரம் தற்போது 8 -9 மணி நேரமாக உள்ள நிலையில், வேலை நேரம் அதிகரிக்கப்பட்டு, நாட்கள் குறைக்கப்படும். 


 ALSO READ | Aadhaar - Voter ID Link: தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது


- இருப்பினும், எந்த ஊழியரும் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய நிர்பந்திக்க கூடாது என்ற விதி சேர்க்கப்பட்டு உள்ளது. 5 மணி நேரத்திற்கு பிறகு ஊழியருக்கு, ரிலாக்ஸ் செய்து கொள்ள ஒரு அரை மணி நேரமாவது பிரேக் கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. 


- புதிய ஊதியக் குறியீட்டில், உங்கள் ஊதியத்திலும் மாற்றம் ஏற்படும். இதன் கீழ் கொடுப்பனவுகள் மொத்த சம்பளத்தில் 50% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என்ற விதி சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் உங்கள் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும். அதன் விளைவாக வருங்கால வைப்பு நிதி (Provident Fund) மற்றும் கிராச்சுட்டி ஆகியவை அதிகரிக்கும். எனினும், உங்கள் டேக் ஹோம் சாலரி என்னும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையலாம். 


இந்த புதிய ஊதியக் குறியீடு, முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்உ அக்டோபர் மாதம் அமலாகலாம் என செய்திகள் வெளியானது. ஆனால் இப்போது அதை வரும் நிதியாண்டில், மத்திய அரசு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் பல காலமாக தீவிர நாவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது குறித்த இறுதி விதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ | Digital Health ID: ஆதார் அட்டை போலவே தனித்துவமான ஹெல்த் அட்டை! பெறுவது எப்படி?