நிபா வைரஸ் புதுப்பிப்புகள்: கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள நிபா வைரஸ் வகை வங்கதேச மாறுபாடு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மனிதர்களிடமிருந்து பரவுகிறது. இதன் தொற்றக்கூடிய வீதம் குறைவாக இருந்தாலும், இதன் இறப்பு வீதம் அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி இல்லாத இந்த வைரஸ், பாதிக்கப்பட்ட வெளவால்கள், பன்றிகள் அல்லது மனிதர்களின் உடல் திரவங்களுடனான தொடர்பு மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் 75% வரை உள்ளது ஆபத்தான விஷயமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் நிபா வைரஸ் அபாயம் தலைதூக்கியுள்ள நிலையில், இந்தியாவின் பிற மாநிலங்களும் இந்த வைரஸ் குறித்த உஷார் நிலையில் உள்ளன. மேலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கபட்டு வருகின்றன. நிவா வைரஸ் தொற்று பற்றிய முக்கிய 10 முக்கிய அப்டேட்களை இங்கே காணலாம்.


1. நிபா வைரஸ் தொற்றின் எதிரொலியாக, கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது செப்டம்பர் 24 வரை ஒரு வாரத்திற்கு மூடப்பட்டிருக்கும். பள்ளிகள், தொழில்முறை கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களும் மூடப்பட்டிருக்கும். வாரம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.


2. சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், செப்டம்பர் 15 அன்று 130 பேர் புதிதாக சேர்க்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்பு பட்டியலில் தற்போது 1,080 பேர் உள்ளதாகக் குறிப்பிட்டார். அவர்களில் 327 பேர் சுகாதாரப் பணியாளர்கள்.


3. கோழிக்கோடு தவிர, பிற மாவட்டங்களில் உள்ள 29 நபர்கள் நிபாவால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளாக பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்களில் 22 பேர் மலப்புரத்தையும், ஒருவர் வயநாட்டையும், தலா 3 பேர் கண்ணூர் மற்றும் திருச்சூரையும் சேர்ந்தவர்கள். பட்டியலிடப்பட்டவர்களில், 175 பேர் அதிக ஆபத்துள்ள பிரிவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 122 பேர் சுகாதாரப் பணியாளர்கள்.


4. ஆகஸ்ட் 30 அன்று இறந்த நபரின் சோதனை முடிவுகள் நேர்மறையாக வந்துள்ளதால், தொடர்பு பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.


மேலும் படிக்க | மிரட்டும் நிபா வைரஸ்.. பீதியில் மக்கள்: மேலும் ஒருவர் பாதிப்பு, கேரளாவில் ஹை அலர்ட்!!


5. தற்போதைய நிலவரப்படி, மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்க 6 ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 30 அன்று இறந்த நபரின் தகனத்தில் கலந்து கொண்ட 17 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் தொற்று உள்ள நான்கு பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


6. நிபா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளும் இதற்கான ஒரு மருத்துவ குழுவை நிறுவ வேண்டும். அந்த குழு தினமும் இரண்டு முறை கூடி சுகாதாரத் துறைக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு மாநிலத்தின் தொற்று நோய் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது.


7. செப்டம்பர் 15 அன்று தேசிய தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ICMR டைரக்டர் ஜெனரல் ராஜீவ் பால், 2018 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இருந்து சில டோஸ் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளை இந்தியா பெற்றுள்ளது என்று தெரிவித்தார். நிபா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவிலிருந்து கூடுதலாக 20 டோஸ் மோனோக்ளோனல் ஆன்டிபாடியை இந்தியா பெறும் என்றும் அவர் கூறினார். 


8. கேரளாவில் நிபாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கர்நாடக அரசு செப்டம்பர் 14ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. கர்நாடகாவின் எல்லையோர மாவட்டங்களான குடகு, தக்ஷின் கன்னடா, சாம்ராஜநகரா மற்றும் மைசூர் உள்ளிட்ட பகுதிகளிலும், மாநிலத்தின் நுழைவுப் புள்ளிகளிலும் தீவிர கண்காணிப்பை அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.


9. கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் பொதுமக்களை முகமூடி அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், சளி, காய்ச்சல், தலைவலி அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவ உதவியை நாடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.


10. உலக சுகாதார அமைப்பு மற்றும் ICMR ஆகியவற்றின் ஆய்வுகள், முழு மாநிலமும் இத்தகைய நோய்த்தொற்றுகளுக்கு, குறிப்பாக வனப்பகுதிகளில் எளிதில் பாதிக்கப்படுவதை எடுத்துக்காட்டுகின்றன. மேலும் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.


மேலும் படிக்க | நிபா வைரஸ் அலர்ட்! பாதிப்புகள், அறிகுறிகள் என்ன..? தற்காத்துக்கொள்வது எப்படி..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ